பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tomulirsi 67 தீர்மானத்துக்கு வந்து விட்டவன்போல், ' எங்கள் மீதாவது உங்களுக்குத் தளரா நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டான். ' ஆம் நீங்கள் செயல் மூலம் அதற்கு ருசுத் தந்திருக்கிறீர் கள் என்ருள் ரோஷனரா. " அப்படியானல் நாங்களே உங்களை மணந்து கொள்ளுகி கிருேம்; சம்மதமா? ’’ அப்பெண்கள் திடுக்கிட்டனர். இதை அவர்கள் கனவில்கூட கருதியிருக்கவில்லை. ஐயா ! உங்களைப் போன்ற உத்தமர் களுக்கு உயர்குலத்துப் பெண்களில் எத்தனையோ பேர் மனைவி யாக வரக் காத்திருப்பார்கள். எதற்காக எச்சில் பாண்டங்க ளான எங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ?’ என்று குமுத் கேட்டாள். "எதற்காக என்ருல், உங்களுக்கு வாழ்வளிப்பதற்காகத்தான்; நான் மேற்கொண்ட கடமையை நிறைவேற்றத்தான்' என்று பளிச்சென்று பதிலளித்த கேஸர் ஸிங் தொடர்ந்து சொன்னன் : இது ஏதடா இவன் நல்லவன் மாதிரிப் பேசினன்; இப்பொழுது விலைக்கு வாங்கிய பெண்களிடம் மற்றவர்கள் நடந்து கொள்ளு வதுபோலவே நடந்துகொள்ளத் தலைப்பட்டுவிட்டானே என்று நினைக்காதீர்கள். என்னுடைய நோக்கம், செய்யாத பிழைக்காக நீங்கள் உயிர்விடக் கூடாது என்பதுதான். எங்கேயாவது நீங்கள் மறு வாழ்வு பெற்று rேமமாக வாழ வேண்டும் என்பதுதான். ஆகையால், உங்களுக்கு எங்களையும் மணந்து கொள்ளத் தயக்க மாக இருந்தால், அவசியம் உங்களுடைய உற்ருர்-உறவினர் விலாசத்தையாவது கூறத்தான் வேண்டும். அவர்களிடம் உங்க ளைச் சேர்த்துவிட்டு நாங்கள் எங்கள் கடமையை முடித்துக் கொள்ளுகிருேம். ' - விஷயத்தை வளர்த்துவானேன். அந்தப் பெண்கள் இறுதி யில் அவர்களை மணக்க உடன்பட்டனர். சீக்கியனை கேலர் ஸிங், முஸ்லிம் பெண்ணையும், முஸ்லிமான அமீர் ஹிந்துப் பெண்ணையும் ஏற்று, அவர்களைத் தங்கள் தங்கள் மதத்துக்கு மாற்றி, உரிய மதச்சடங்குகளுடன் மணம் செய்து கொண்டனர். ரோஷனரா தாராவானள். குமுத் ஸுலைமாவாள்ை. கடத்தி வரப்பட்ட பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளு வது மனிதத் தன்மை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டினன் கேஸர் ஸிங். தான் காட்டியது மாத்திரமல்ல; தன்னை அண்டி தன் வழி நடந்து வந்த அமீரையும் காட்டச் செய்தான். அவர் கள் இருவரும் மனைவியைப் பூவெனப் போற்றி, இல்லற வாழ்க்