பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அஞ்சலி கையை இன்பப் புனலாக்கி அதிலே நீந்தித் திளைத்தனர். மண மான மறு வருஷமே தாரா கணவனுக்குத் தங்கப் பதுமையென ஒரு பெண் குழந்தையை அளித்தாள். மொத்தத்தில் புரட்சிகர மான முறையில் ஒன்றுபட்ட இத்தம்பதிகளின் வாழ்விலே இன்பம் நாளுக்கு நாள் பெருகிற்றேயன்றிக் குறையவில்லை. ஆனால், விதி அரக்கனுக்குத்தான் மனிதரின் வாழ்க்கையில் விபரீத விளையாட்டு விளையாடாவிட்டால் பொழுது போகாதே. தாரா கமலே ஈன்றெடுத்த ஆருவது மாதத்தில் அவர்களுடைய இன்ப வாழ்வில் சைத்தான் புகுந்தான். பிரிவினை அமளியெல்லாம் ஒருவாறு ஒய்ந்த பிறகு, இந்தியா வும், பாகிஸ்தானும் அகதிகள் பரிவர்த்தனே, கடத்தப்பட்ட பெண்களே மீட்டல் போன்ற நற்காரியங்களைச் செய்ய ஒர் உடன் பாட்டுக்கு வந்தன. இப்பணிகளில் இரு அரசாங்கங்களின் போவீசும் தீவிரமாக ஈடுபட்டன. திடீரென்று ஒருநாள் கேஸர் ஸிங்கின் வீட்டுக்குச் சில போலீசார் வந்தனர். அவனுடைய மனைவியாக வாழும் தாரா, ரோஷனுரா என்ற முஸ்லிம் பெண் என்றும், அவளுடைய பெற்ருேர் லாகூருக்கு அருகில் உள்ள ஷேக்குப்புரா என்றகிராமத் தில் உயிரோடு இருக்கிருர்கள் என்றும், அவர்களிடம் தாராவை ஒப்படைக்க அழைத்துச் செல்லப் போவதாகவும் அறிவித்தனர். கேஸர் ஸிங்கும், தாராவும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந் தனர். தாங்கள் முறைப்படி மணம் செய்துகொண்டு கணவன்மனைவியாக வாழ்ந்து வருவதையும், ஒரு குழந்தைக்குப் பெற்ருேராகியிருப்பதையும் அவர்கள் அறிவித்தனர். தாரா ஒருபடி மேலேசென்று தான் பெற்ருே.ரிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்ல்ை என்றுகூடக் கூறினுள் ' எங்கள் நிம்மதியான இல்லற வாழ்வைத் தகர்க்காதீர்கள் ' என்று அவள் கதறினுள். ஆனல் போலீஸ் அதிகாரிகளுக்கு அவளைக் கேஸர் ஸிங்கிடமே விட்டுச் செல்ல அதிகாரம் இல்லையே ! அவர்கள் அதை அவ னுக்கு எடுத்துச் சொல்லி, ! உங்களுடைய கேஸ் சற்று விசித் திரமானதுதான். இருந்தாலும், நாங்கள் முறைப்படி தாராவை அவள் பெற்ருே.ரிடம் சேர்த்துத்தான் ஆக வேண்டும். ஒப்ப டைத்துவிட்ட பிறகு வேண்டுமானல் அவள் தன் பெற்ருேரின் அனுமதி பெற்று உங்களிடம் திரும்பி வந்து சேர்ந்து கொள்ளட் டும் ' என்று கூறினர். - தாராவைப் பெற்ருேரிடம் போக விட்டால் அவர்கள் அவ ளைத் திருப்பி அனுப்புவார்களோ மாட்டார்களோ, என்று கலங்கி ன்ை கேலர் ஸிங். ஆனால், போலீஸார் தன்னை எப்படியும்