பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயாவி 69 கொண்டு சென்றே தீருவார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், தாரா கணவனுக்கு ஆறுதல் கூறினுள். கவலைப்படாதீர்கள்: என் உயிராகிய நீங்கள் இங்கே இருக்கையில், என் உடலை அவர் கள் அங்கே கட்டி வைத்துவிட முடியாது. இவர்கள் என்னைப் பெற்ருேங்களிடம் ஒப்படைத்ததும், அவர்கள் சம்மதம் அளித் தாலும் அளிக்காவிட்டாலும், நான் இங்கே புறப்பட்டு வந்து விடுவேன் ’’ எனப் பலவாறு எடுத்துச் சொல்லிவிட்டுப் போலீஸா ருடன் புறப்பட்டுச் சென்ருள். ஆறு மாதத்துக் குழந்தையான கமலைக்கூட அவள் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. ' கமல் உங்களிடமே இருக்கட்டும். அவளைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும், எனக்கு நரக வேதனையாகவே இருக்குமாதலால், நான் விரைவில் இங்கே திரும்பி வர, அவள் உங்களிடம் இருப்பது ஒரு துாண்டுகோலாக இருக்கும் ' என்று கூறி, குழந்தையை விட்டுவிட்ட்ே சென்ருள். ஆளுல் அன்று போனவள்தான் தாரா; அதன் பிறகு அவள் திரும்பி வரவும் இல்லை; அவளிடமிருந்து எவ்விதத் தகவலும் கேஸர் லிங்கிற்குக் கிடைக்கவில்லை. அவன் அவளுக்குக் கடிதத்தின் மேல் கடிதம் எழுதினன்: தந்திகள் அனுப்பினன். எல்லாம் கிணற்றில் எறிந்த கற்களாகவே போயின. நாட்கள் வாரங்களாகி, வாரங் கள் மாதங்களும் ஆகிவிட்டன. ஆனல் தாரா எங்கே ? அவள் ஏன் திரும்பி வரவில்லை? ஏன் கணவனின் கடிதங்கள் ஒன்றுக் குக்கூடப் பதில் எழுதவில்லை ? நல்ல வேளையாகக் குழந்தையைப் பற்றிய கவலை கேஸர் விங்குக்கு இருக்கவில்லை. தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த அமீரும், ஸாலைமாவும் கமலேக் கண்ணென வளர்த்து வந்தனர். ஸுலைமாவிடம் தாயன்பைப் பெற்று வந்ததால், கமலும் தாய்க்காக ஏங்கவில்லை. ஆனல் கேஸர் விங் மனைவிக்காக ஏங்கினன். ஏங்கி ஏங்கி உருகினன். அவன் கடமைக்காகவே, தற்கொலை செய்து கொள்வதினின்றும் தடுப்பதற்காகவே, தாராவை மணந்து கொண்டான். எனினும் மணந்து கொண்ட பிறகு அவனுக்கு அவளிடம் ஒருவிதத் தெய் விகக் காதலே ஏற்பட்டுவிட்டது. அந்தக் காதல் இப்பொழுது அவனைத் தகித்தது. தாராவை அவளுடைய பெற்றேர் தாம் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் திடமாக நம்பினன். அவளை இங்கே திரும்பி வரச் செய்ய வேறு ஏதேனும் வழியுண்டா என்பதை அறியப் பலரைக் கலந்து ஆலோசித்தான். ஆளுல் அந்த ஆலோசனைகளோ அதற்குரிய சாத்தியக் கூறுகள் எதையும் காட்டாததோடு, அவனுடைய மனம் உடையும்படி யான செய்தி ஒன்றையும் அளித்தன. இம்மாதிரி அகதிகள் பரிவர்த்தனை மூலமும், கடத்தப்பட்ட பெண்களின் மீட்சி மூலமும்