பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அஞ்சலி பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் திரும்பியவர்களே இரு அரசாங்கங்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்ப தில்லை என்ற விவரம்தெரிந்த பிறகு கேலர் ஸிங் ஒரேடியாக இடிந்துபோய்விட்டான் எப்படியிருந்தாலும் தாராவின்றி இனித் தன்னல் வாழ முடி யாது என்று தோன்றிவிட்டது அவனுக்கு. ஆகையால், குழந்தை யுடன் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்று அங்கேயே நிரந் தரமாகத் தங்கிவிடுவது என்று தீர்மானித்தான். ஆனல் அப்ப டிச் சென்ருலும் சீக்கியனை தன்னுடன் தங்கள் மகள் சேர்ந்து வாழத் தாராவின் பெற்ருேர் மறுத்துவிடுவார்களோ என்று அவன் இங்கேயே முஸ்லிம் மதத்தைத் தழுவி அப்துல் ஜாபர் என்ற பெயர் பூண்டான். தன் கடையையும், இதர சொத்துக் களையும் விற்றுப் பணமாக்கிக் கொண்டான். உயிர் நண்பனுக வும், உற்ற துணைவனாகவும் விளங்கிய அமீரிடம் விடை பெற் றுக் கொண்டு, உரிய அனுமதிச் சீட்டுகளுடனும், ஒன்றரை வய துக் குழந்தை கமலுடனும் ஒருநாள் லாகூருக்குப் பயணமானன், அமிர்தசரஸ்ஸில் அமீரும், ஸ்-ல்ைமாவும், கேலர் ஸிங்கின் தெய்விகக் காதல் வெற்றி பெற வேண்டுமென்றும், அவனும் தாராவும் மீண்டும் ஒன்றுகூடி ஆனந்தமாக வாழ வேண்டுமென் றும் அல்லாவை இடைவிடாது தொழுது வந்தனர். ஆனல் கேலர் விங்கின் தெய்விகக் காதல் வெற்றி பெற்றதா ? அவனும் தாராவும் மீண்டும் ஒன்று கூடினரா? கேஸர் ஸிங் லாகூர் சென்று ஒரு வாரம் ஆன பின் ஒருநாள் காலையில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான் அமீர். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைப் படித்ததும் , அவன், 1 ஐயோ ! என்று அலறிவிட்டான். அந்தச் செய்தி இதுதான்: லாகூரில் சீக்கியனின் தற்கொலை : உண்மையான காதலை நிரூபிக்க உயிரையே கொடுத்தான்: லாகூர், மார்ச்சு, 8-ஆயிரக்கணக்கான லாகூர் வாசிகள் ஜனஸா'வில் கலந்து கொள்ள, இன்று மாலை இங்குள்ள மியானி ஸாஹிப் தர்காவில் அப்துல் ஜாபர் என்ற கேலர் ஸிங்கின் சட லம் அடக்கம் செய்யப்பட்டது. முப்பது வயதுகூட நிரம்பாத கேலர் லிங் இன்று அதிகால்ை யில் தன் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையுடன் ஒடும் ரெயிலில் பாய்ந்துவிட்டான். காதலி தன்னையும், குழந்தையையும் நிரா கரித்ததே தங்களது தற்கொலைக்குக் காரணம் என்று அவனிடம் அகப்பட்ட கடிதம் அறிவித்தது, -