பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயாவி 7 I கேலர் ஸிங் அமிர்தசரஸ்ஸைச் சேர்ந்தவன்; பிரிவினை அமளி யில் கடத்தி வரப்பட்ட ரோஷனரா என்ற பெண்ணுக்கு வாழ் வளிப்பதற்காக, அவளைச் சீக்கிய மதத்தைத் தழுவச் செய்து தாரா என்று பெயர் மாற்றி முறைப்படி மணம் செய்து கொண்டான். அவர்களுக்குக் கமல் என்று ஒரு பெண் குழந்தை யும் பிறந்தது. இச்சமயத்தில் ரோஷனரா கடத்தி வரப்பட்ட பெண் என் பதை அறிந்து இந்தியப் போலீஸார் அவளைக் கேலர் விங்கிட மிருந்து பிரித்து லாகூருக்கு அருகில் உள்ள ஷேக்குப்புராவில் வசித்து வந்த பெற்ருே.ரிடம் அனுப்பிவிட்டனர். மனைவியைப் பிரிந்த கேலர் ஸிங் வாழ்வையே இழந்து விட்ட வன்போல் ஆனன். அவள் திரும்பி வருவதற்கு எவ்வித சாத்தியக் கூறுகளும் இல்லாமையால், தானும் இஸ்லாமிய மதத்தைத் தழுவி அப்துல் ஜாபர் எனப் பெயர் பூண்டு, சொத்து சொம்பு களை விற்று எடுத்துக்கொண்டு, குழந்தையுடன் மனைவியை நாடி வந்தான். ஆனல் ரோஷனராவின் பெற்ருேர் அவனைத் தங்கள் வீட்டுக் குள்ளேயே ஏற்ற மறுத்துவிட்டனர். எப்படியோ அப்துல் ஜாபர் மனேவியைச் சந்தித்துத் தன்னுடன் வந்து விடுமாறு அழைத் தானம்; ஆனால் அவள் மறுத்துவிட்டாளாம்; குழந்தையையாவது ஏற்றுக்கொள்ளும்படி மன்ருடினுளும்; அதையும் பெற்றுக்கொள்ள அவள் இணங்கவில்லையாம். மனமுடைந்த அப்துல் ஜாபர் லாகூருக்குத் திரும்பி வந்து, இன்று அதிகாலையில் லாகூர் ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தூரத்திற் கப்பால் ஒடும் ரெயிலில் பாய்ந்து விட்டான். அவனும் குழந்தை யும் ஸ்தலத்திலேயே மரணமடைந்தனர். அப்துல் ஜாபரின் சட் டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் அவன் மேலே கூறப் பட்ட விவரங்களையெல்லாம் எழுதியிருந்தான். அதோடு, தனது உண்மையான காதல் இவ்விதம் தோல்வியடைந்ததால், தானும், குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளுவதாகவும் குறிப்பிட் டிருந்தான். ரோஷனாா தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாலும், தான் அவள்மீது கொண்டிருந்த காதல் பவித்திரமானது என்றும், அதற்கு அடையாளமாக, இந்தியாவிலிருந்து தன் சொத்து - சொம்புகளை விற்றுக் கொண்டு வந்த பணம் அனைத்தையும் ரோஷ ரைாவுக்கு அனுப்பிவிட்டதாகவும் அவன் அக்கடிதத்தில் குறிப் பிட்டிருந்தான். ஜஹாங்கீரும் நூர்ஜஹானும் காதல் வளர்த்த பூமியில் இன்று ஒரு காதலன் காதலுக்காக உயிர் நீத்தான். பாகிஸ்தான் முழு வதுமே அப்துல் ஜாபரைத் தெய்விகக் காதலன் என்று கொண்