பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அஞ்சலி டாடுகிறது. மியானி ஸாஹிப் தர்காவிலுள்ள அவனுடைய கல் லறை இனி லாகூர்வாசிகளுக்கும், லாகூருக்கு வருகிறவர்களுக்கும், பயபக்தியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு புனித ஸ்தலமாக விளங் கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. ஆம் ; அப்பத்திரிகையின் ஊகம் சிறிதும் பொய்க்கவில்லை; தன் எஜமானரின் தூய காதலை அந்த நன்றிகெட்ட தாரா உணர வில்லையெனினும், லாகூர் நகரிலுள்ள ஒவ்வொருவரும், குறிப் பாகக் கல்லூரிகளில் படிக்கும் இளம் மாணவ-மாணவிகள் நன்கு உணர்ந்து, அவருடைய தர்காவை உண்மைக்காதலின் சின்னமாக மதித்து நாள்தோறும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிரு.ர்கள் என்பதை லாகூருக்குப் போய் வந்தவர்கள் கூறக் கேட்டான் அமீர். அப்படிப்பட்ட உத்தமரின் கல்லறைக்குத் தானும் விஜயம் செய்து அஞ்சலி செலுத்த வேண்டுமென்ற ஆவல் கடந்த ஒரு வருஷமாக அமீரின் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக இப்பொழுது அவனுக்கு அதற்கு வாய்புக் கிடைத்தது. அமீர் இப்பொழுது ஒரு பிரபல தோல் வியாபாரக் கம்பெனியில் பிரதம விற்பனையாளகை வேல்ை பார்த்து வந்தான். ஒரு வியாபார பேரத்தை முடிப்பதற்காகவே அக்கம்பெனி இப் பொழுது அவனை லாகூருக்கு அனுப்பிற்று, அமீர் ஒரு நாள் இரவு லாகூரை வந்தடைந்தான். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளைக் கழித்தவனதலால், இரவென்றும் பாராமல், வந்த உடனே மியானி ஸாஹிப் தர்காவை நோக்கிப் புறப்பட்டு விட்டான். அப்பொழுது இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும். நகரத் தின் பரபரப்பெல்லாம் அநேகமாக அடங்கிவிட்டது. தர்காவி லும் அமைதி நிலவிற்று. ஆம்; இந்நேரத்தில் அங்கே யார் வரப் போகிருர்கள்? கேஸர் சிங்கின் கல்லறையைக் கண்டு பிடிப்பதற்காக அமீர் ஒவ்வொரு கல்லறையாக அருகில் சென்று பார்த்துக் கொண்டே வந்தான். அதோ அந்தக் கல்லறையின் முன் யாரோ ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றுகிறதே. அந்த ஆளைக் கேட்டால் ஒருகால் விவரம் சொல்லக்கூடுமென்று அவன் அங்கே போனன். கல்லறையை நெருங்கியபோது அங்கே அமர்ந் திருந்தது ஒரு பெண் என்பது அவனுக்குத் தெரிந்தது. கல்லறை விலையுயர்ந்த சலவைக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அதில் ஏராளமாக மலர்கள். தூவப்பட்டிருந்தன. மாலையில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கொளுத்திவிட்டுப் போயிருந்த ஊதுவத்தி களின் நறுமணம் இன்னும் அங்கே கமழ்ந்து கொண்டிருந்தது: