பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii விருப்பத்துக்கு மாருகக் கறைப் படுத்தப்பட்ட பெண் களே இளைஞர்கள் மணந்து கொள்வது அறத்துக்கு மாறுபட்டதாகாது என்ருர் காந்தியடிகள். அந்தக் கருத்துக்கு விளக்கம் போல் மாயாவி, ரா. பாலகிருஷ்ணன், கோமகள் ஆகியோர் தங்கள் கதைகளை உருக்கத்தோடு உருவாக்கியிருக்கிருர்கள். காந்திஜியின் பெயரைக் கூறிக் கொண்டே சிலர் செய்யும் தகாத செயல்களும் எழுத்தாளர்களுக்குக் கோபமூட்டியுள்ளன. சிதம்பர ரகுநாதன், ஆர். சூடாமணி, முதலியோரின் கதைகள் இத்தகைய போலிகளை இனம் காட்டும் கதைகள். காந்திஜி நம்மவர்களின் ஆடம்பரம், நகைப் பித்து, போலி வாழ்க்கை இவற்றுக்கு எதிராகவும் போரிட்டவர். பெண்கள் நகை அணிவதைக் கண் டித்து, அவர்கள் அணிந்திருந்தவற்றை ஹரிஜன நிதிக் காகத் தானம் கேட்டு வாங்கியவர். பி. எஸ். ராமையாவின் பதச்சோறு அந்தக் கருத்தை அடிப் படையாகக் கொண்ட அழகான கதை. நமக்கு இப்போது மிக மிகத் தேவையானது நாம் இந்தியர்' என்ற ஒருமைப்பாட்டு உணர்ச்சி. நாடு விடுதலை பெற்று விட்ட பிறகு, தனித் தனி இன உணர்ச்சிகளும், சாதி-சமய உணர்ச்சிகளும் நாட்டில் தலை விரித்தாடத் த்ோடங்கி விட்டன. காந்திஜி ஊட்டிய ஒற்றுமை உணர்ச்சியில் நாம் பெற்ற சுதந்தி ரம், நமது பிரிவினை மனகான்மையால் எங்கே மீண்டும் பறிபோய் விடுமோ என்ற இயல்பான அச்சம் சில எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. சீனுவும் -பாகிஸ்தானும் நம்மைத் தாக்கிய போது, அவர்கள் இந்த வேற்றுமை மனப்பான்மைக்கு எதிராக நமக்கு அறைகூவல் விடத் தயங்கவில்லை. காந்திஜியின் நூற்றண்டு விழாவின நாம் தேசீய ஒருமைப்பாட்டு விழாவாகவும் கொண்டாடி இருக்கின்ருேம். ஒருமைப் பாடு வலுப்படவில்லையாளுல் இங்கு கர்ந்தியமில்லை;