பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tamuuffsól 73 இவற்றிலிருந்து அதுவே கேலர் ஸிங்கின் கல்லறையாக இருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆஹா, இப்படி நள்ளிரவில் கூட ஒருபெண்மணி வந்து அஞ்சலி செலுத்த வேண்டுமென்ருல், கேலர் ஸிங் எவ்வளவுதூரம் லாகூர்வாசிகளின் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்? இப்படி உலகமே வியந்தேற்றும் அந்த அண்ணலை நன்றிகெட்ட தாரா ஒரு கணத்தில் உதறித் தள்ளிவிட்டாளே, சீ; பெண்ணு அவள் ? பேய்! கொடிய பேய்! ஆள் அரவம் கேட்டு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அந்தப் பெண் ஓர் அதிர்ச்சியுடன் திரும்பினள். அருகிலிருந்த மின்சார விளக்கின் ஒளி அவள் முகத்தில் விழுந்ததும், அங்கே கண்ணிர் பளபளப்பதை மட்டுமா கண்டான் அமீர் ? இல்லை; அதையும்விட ஒரு பேராச்சரியம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது. அப்பெண்-ஆம், அவள் தாராவேதான்; அவளும் அமீரை அடையாளம் தெரிந்துகொண்டாள். மறு நிமிஷம், அமீர்; அமீர்; இந்தப் பாவியை அவர் மன்னிப்பாரா அமீர்; ' என்று அவள் கதறினுள். அவன் வெறுப்பு வெளிப்படச் சிரித்தான். செய்வதையும் செய்துவிட்டு மன்னிப்புக்கு இறைஞ்சும் உங்கள் போக்கு விசித்திரமாகத்தான் இருக்கிறது தாரா ! ' என்று வெடித்தான். ‘' என்னைத்தாரா என்று அழையாதே அமீர். தாரா செத்துவிட்டாள். உலகம் புகழும் உன்னத மனிதராக விளங்கிய கேலர் ஸிங்கின் மனைவி தாரா என்ருே இறந்துவிட்டாள். இந்தப் பாவி ரோஷனரோ, வேருெருவரின் மனைவி; ” ' என்ன மனைவியா? வேருெருவரின் மனைவியா? ஆம் அமீர்; நான் வஞ்சிக்கப்பட்டேன். பெற்ருேர்களால் சிறை செய்யப்பட்டு இங்கு வந்த ஒரு வாரத்துக்குள் ளாகவே மறுபடியும் முஸ்லிமாக்கப்பட்டு, வேருெருவருக்குக் கட்டாயமாக மணம் செய்து வைக்கப்பட்டேன். என் உடல் ஏற்கனவே ஒரு தடவை மாசுபடுத்தப்பட்டது. அவர் என்ன மணந்து என் மாசைப் போக்கினர். அந்த மகாத்மாவுக்கு மீண்டும் ஒருதடவை மாசுபடுத்தப்பட்ட உடலேயா சமர்ப்பிப்பது? தவிர என் பெற்ருேரும், தற்சமயம் இவ்வூரில் பெரிய வியாபாரி யாக விளங்கி வரும் என் இப்போதைக் கணவரும், உன் எஜமானரையும், என் கண்மணி கமலேயும் கொன்றுவிட வேண்டும்; இல்லாவிட்டால் நான் அவர்களோடு ஓடிப்போய் விடுவேன் என்று பேசிக்கொண்டதையும் நான் கேட்டேன்,