பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. ரா குணம் திலையாரி முருகனின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலம். தலையில் குடுமி, நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி. நாலு முழம் வேஷ்டியை வரிந்து கட்டி, மேலே ஒரு காக்கி நிறச் சட்டையை எப்போதும் அணிந்திருப்பான். கையில் எப்போதும் அவனைவிட ஒரு பிடி உயரமான கறுப்பு மூங்கில் கம்பு. சேரியில் அவனே ஒரு பிள்ளையார் கோயில் கட்டி இருந்தான். அதற்கு தர்மகர்த்தா, பூசாரி, பண்டாரம் எல்லாம் அவனேதான். கோயில் நிர்வாகத்துக்காக, ஊரில் சொந்த வீட்டுக்காரர்களிடம் மாசாமாசம் எட்டணுவோ நாலணுவோ அவரவர் கொடுத்ததை வசூல் பண்ணுவான். இரண்டாம் தேதி அன்று எல்லோர் வீட்டு வாசலிலும் அவனைப் பார்க்கலாம். ஒரு சின்ன நோட்டுப் புஸ்த கமும் பென்சிலும் கையில் இருக்கும். வாசலில் வந்து நின்று 'சாமி!' என்று குரல் கொடுப்பான். ஊருக்கே ஐயரான கோபால சாஸ்திரியானுலும் சரி, கிராம முன்சீப் ராதாகிருஷ்ணப் பிள்ளையானுலும் சரி, போஸ்ட்மாஸ்டர் கன்னையா நாயுடுவா லுைம் சரி, பொற்கொல்லரான சொக்கலிங்க பத்தரானலும் சரி, எல்லோரும் அவனுக்கு சாமிதான். வீட்டுக்காரர் வெளியே வந்தால் ஒரு பெரிய கும்பிடு. நோட்டுப் புஸ்தகத்தையும் பென் சிலையும் வாசல்படியில் வைத்துவிட்டுச் சற்று ஒதுங்கிளுற்போல் நிற்பான். நோட்டுப் புஸ்தகத்தில் பெயரை எழுதிவிட்டுக் காசையும் அத்துடன் வைத்தார்களானல் இன்னொரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு எடுத்துக்கொள்வான். ஊரில் எல்லோரும் அவனுக்குச் சாமியானல், சேரியில் எல் லோருக்கும் அவன்தான் சாமியார். கோவில் கட்டி, தினம் தவருமல் பிள்ளையாருக்கு அவன் பூஜை செய்து வந்ததாலும்,