பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 குணம் நெற்றியில் பட்டைபட்டையாக விபூதி இல்லாமல் அவன் என்றும் இருந்ததில்லையாதலாலும் அந்தப்பெயர் அவனுக்குவந்துவிட்டது. சண்டை சச்சரவு ஏற்பட்டால், முன்சீப்பிடம் போவதற்குமுன் அவனிடம்தான் போவார்கள் மத்தியஸ்தத்திற்கு. நல்லது கெட்டது நடந்தாலும் அவனைக் கலந்துகொள்ளாமல் ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து நாலிலோ ஐந்திலோ காந்திஜி சென்னைக்கு வந்திருந்தபோது கோபால சாஸ்திரி தவருமல் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போய்வந்தார். அதிலிருந்து, தலையாரி முருகன் பிள்ளையார் கோவிலுக்குப் பணம் வசூல் பண்ண வந்தால், நோட்டுப் புஸ்தகத்தையும் பென்சிலையும் அவன் வாசல்படியில் வைக்குமுன் அவன் கையிலிருந்தே அவற்றை வாங்கிக்கொண்டு அவன் கையிலேயே திருப்பியும் தரத் தொடங்கினர். முருகன் என்ன புரிந்துகொண்டானே என் னவோ தெரியாது; அவர் காரியத்தினால் உச்சி குளிர்ந்துபோனவ கைவும் காட்டிக்கொள்ளவில்லை. அதை விகல்பமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போல் சாதாரணமாகவே கும்பிடு போட்டுக் காசைப் பெற்றுக்கொண்டு போனன். ஸ்வாமி!' சாஸ்திரி வீட்டுக்குப் பக்கத்து வீடு போஸ்ட்மாஸ்டர் கன்னயா நாயுடுவுடையது. நடுவில் இருந்த குறுக்குச் சுவர் ஒர மாக நின்றுகொண்டிருந்தார் நாயுடு. மடித்துக் கட்டின வேஷ்டி யுடன், மேலே துண்டு ஒன்றும் இல்லாமல் தொப்பையைச் சாய்த் துக்கொண்டு நின்ற அவர், சுருட்டு நெருப்பைக் குறுக்குச் சுவர் மேல் தட்டி அணைத்து, அதைக் காதில் செருகிக்கொண்டு ஒரு கணேப்பும் கனைத்துக் கொண்டார். 'என்ன நாயுடுகாரு?" "அந்தத் தலையாரி முருகம்பய ஓங்க கையிலிருந்தே நோட்டுப் புஸ்தகத்தையும் பென்சிலையும் வாங்கிட்டுப் போருனே என்ன அக்கரமமுங்க ஜோட்டாலே அடிக்க வாணும்? ' சாஸ்திரி லேசாகச் சிரித்தார். ' அவன் மேலே தப்பில்லே; நானே தான் அவன் கையிலியே குடுத்தேன். என்ன இருந்தாலும் அவனும் நம்மைப்போல மனுஷன் தானே நாயுடு ஸார். ' என்ருர். வெறுப்புடன் முகத்தைச் சுளித்தார் நாயுடு. "என்ன போங்க எனக்கொண்ணும் புடிக்கல்லே. இந்தப் பாப்பாரு எடம் குடுத்துத் தான் இந்தப் பறப்பசங்க துளுத்துப்புட்டானுங்க ! நான் நல்லாச்