பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 குணம் கோவிச்சுக்கப்படாது. முப்பது வருஷத்துக்கு முன்னலே உங்கப் பாவும் எங்கப்பாவும் இருந்த காலத்திலே, எங்கப்பா பக்கத்திலே உங்கப்பா உக்காரமாட்டார். இப்போ நானும் நீங்களும் சரி சமானமா இருக்கிறது சர்வசாதாரணமாய்ப் போயிடுத்து. ஆன, இன்றும் தாழ்த்தப்பட்டவாளா இருக்கிறவாளுக்கு அந்த உரிமை களைக் கொடுக்க மட்டும் நம்மிலே ரொம்பப் பேருக்கு மனசு வர மாட்டேங்கறது. நமக்கு மேலே இருக்கிறவாளோடே சம உரிமை கொண்டாடப் பார்க்கிருேம்; நமக்குக் கீழே இருக்கிற வாளுக்கு அந்த உரிமையைக் குடுக்க மனசு வல்லே. அப்படித்தானே ? ' நாயுடு கசப்பை விழுங்கியவர் போல் முகத்தைச் சுளித்து, காதின் மேலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சாஸ் திரி மேலும் சொன்னர். என் மனசும் உங்க மனசு மாதிரிதான் இருந்தது. தினம் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போனேன்; காந்திஜி சொன்னதை எல்லாம் கேட்டேன் ; யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன் ; அவர் சொல்றதுதான் சரின்னு புரிஞ்சிது. மனுஷன் ஒழுக்கத்தினலே தான் உயரணும் , அதேைலயே தாழனும். பொறவியினலே இல்லை. ’’ நாயுடு த்சு...த்சு...என்று நாக்கினல் சப்தித்து விட்டுப் புகை விட்டுக் கொண்டே உள்ளே போய் விட்டார். மாயவரம், தஞ்சாவூர், கும்பகோணம் என்று மாற்றலாகி ஊர் ஊராகப் போய் விட்டுப் பன்னிரண்டு வருஷத்துக்குப் பின் உத்தியோகத்தில் ஒய்வு பெற்று மறுபடி நாயுடு ஊருக்குத் திரும்பி வந்தபோது சாஸ்திரிக்கும் ரொம்ப வயசாய் விட்டது, படுகிழம்; உச்சிக் குடுமியில் எண்ணி நாலு மயிர் ; பொக்கை வாய். ஆனல் உடம்பு திடமாக இருக்கிறது, நடமாடிக் கொண்டிருக்கிருர் : பிள்ளை குட்டி இல்லாததால் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வருகிரு.ர். அசப்பிலே பாத்தா காந்தி மாதிரி இருக்கீமே! காந்தி பக்தர் இல்லே ; அதான் காந்தி மாதிரி ஆயிட்டீம் ! ஒரு புள்ளெயெ வச் சிக்கிட்டுப் படிக்க வச்சுப் பெரிய மனுஷனுக்கறதே ரொம்பக் கஷ்டமாருக்கு: நூறுபேர் போல புள்ளைகளைக் கட்டி மேய்கிறீமே. எப்படி முடியுது இந்த வயசுலே?” என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப்படும் நாயுடு ஒரு தினம் கேட்டார். பையனுக்கு வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு, என்ன என்னவோ சர்டி பிகேட்டுகள் எல்லாம் கேக்கருன். எல்லாத்தியும் டைப் அடிச்சு வச்சிருக்கான், அதெல்லாம் உண்மை நகல்னு ஒரு ஆபீசர் கை