பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. ரீர் 7. 9 யெழுத்துப் போட்டுத் தரணுமாம். உமக்கு யாரையாவது தெரி யுமா ; நீர் தான் எல்லாருக்கும் வேண்டியவராச்சே ?”

  • அதுக்கென்ன வாங்களேன், நம்ப டிப்டி கலெக்டர் விஞய கத்துக் கிட்ட அழச்சிண்டு போரேன். ஒடனே கையெழுத்துப் போட்டுக் குடுத் துடுவன்' என்று நாயுடுவையும் அழைத்துக் கொண்டு டிப்டி கலெக்டரின் பங்களாவுக்குப் போளுர் சாஸ்திரி. இருவரையும் கைகூப்பி வண்ங்கி வரவேற்று, ஹாலில் அமரச் செய்து, டைப் அடித்த சர்டிபிகேட்டுகளில் கையெழுத்துப் போட் டுக் கொடுத்த டிப்டி கலெக்டரின் பவ்யத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்த நாயுடு, ஹாலில் வினயகம் உட்கார்ந்திருந்த இடத் துக்கு மேல், சுவரில் மாட்டி இருந்த பெரிய புகைப் படத்தைக் கண் கொட்டாமல் பார்த்தபடி வெளியே வந்தார்.

- நம்ப விளுயகம் யார்னு தெரியறதா ?’’ என்று கேட்டார் சாஸ்திரி இருவரும் வீட்டை நோக்கி நடக்கையில். g ^ உ.ம்...தெரியலே. ஒரு வேளை, நம்ப தலையாரி முருகன் இருந்தானே, அவனுக்கு ஏதாவது...?’’ - நம்ம தலையாரி முருகளுேடெ மகனே தான் முருகளுேடெ படம், பெரிசா என்லார்ஜ்மெண்டு, ஹால்லே மாட்டி இருந்துதே பூமாலையோடே பாத்தீரா ?' பார்த்தேன்; முருகன் மாதிரி இருக்கேன்னு நெனச் சேன்...”* முருகனே தான்! பிள்ளையார் கோயிலுக்குப் பணம் வசூல் பண்றப்பொ ஒவ்வொரு சமயம், என் புள்ளெ படிக்கிருன் : சர்க்கார்லே ஸ்காலர்ஷிப் தராங்க : புஸ்தகம் வாங்கப் பணம் இல்லே ஏதாவது இந்த மாசம் கூடப் போட்டுத் தந்தா அவனுக் கும் உபயோகமாக இருக்கும்’னு கேட்டு வாங்கிண்டு போவன் இல்லை? அந்தப் பையன்தான் வினயகம். பி. ஏ. பாஸ் பண்ணின தும் கவர்மெண்டுலே ஆபீசராகவே வேலைக்கு எடுத்துண்டுருக்கா. பாவம், முருகன்தான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே. பையன் பி. ஏ. படிச்சிண்டிருக்கச்சே போயிட்டான். அப்பாவைப் போலவேதான் புள்ளெ. பெரிய உத்தியோகஸ்தன்னு ஒரு வீண் ஆடம்பரம், அதிகாரம் ஒன்றும் கிடையாது; குழந்தை சுபாவம்; பெரியவ: கிட்டெ ஒரு அடக்கம், மரியாதை......' சாஸ்திரி மேலே சொன்னதொன்றும் நாயுடுவின் காதில் விழ வில்லை. பதினேந்து வருஷத்துக்கு முன் நடந்த சம்பவத்தின் நினைவிலே லயித்துப் போயிருந்தது அவர் எண்ணமெல்லாம். சாஸ்திரி சொன்னது போல் தலையாரி முருகன் வந்து அவரையும்