பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குணம் பணம் கேட்டிருக்கிருன், பிள்ளையின் படிப்புக்கு ஏதாவது ஒத்தாசை செய்யும்படி. அடே முருகா ! இதோ பாரு, உம் புள்ளெ படிச்சு என்ன செய்யப் போருன் ? கலெக்டர் வேலையா பண்ணப் போருன் ? பேசாமெ வயல்லெ கொண்டுபோய் வேலைக்கி உடுவியா?...' என்று சொல்லி அனுப்பிவிட்டார். கையிலே இருந்த காகிதங்களே-முருகன் மகன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த காகிதங்களே-இந்தக் கைக்கும் அந்தக் கைக்குமாக மாற்றியபடி சிந்தனையில் ஆழ்ந்து நடந்தார் இப்போது. நான்கைந்து மாசத்துக்குப் பிறகு மறுபடி அவரைப் பார்த்த சாஸ்திரி, ' என்ன நாயுடுகாரு, இப்புடி எளச்சுப் போயிட்டீர்; என்ன உடம்பு? ' என்று கேட்டார். ' உடம்புக்கு ஒண்னும் இல்லே, எல்லாம் மனசுக்குத்தான். உம்ம பாடு தேவலை, புள்ளை குட்டி ஒண்ணும் இல்லாததே ! என்னைப்போல ஒண்ணை வச்சிண்டிருக்கவும் வேண்டாம், இப்படி ஆகவும் வேண்டாம்” என்று நாயுடு சொல்லவும், அடடா, நாம்ப ஒண்ணும் கேள்விப்படலீயே என்று திடுக்கிட்டுப்போன சாஸ்திரி, 'ஏன், உங்க மகனுக்கு என்ன ஆச்சு ? ' என்று பதற்றத்துடன் கேட்டார். அப்படி நீங்க நினைக்கிற மாதிரி ஒண்னும் ஆகல்லே. உத்தியோகம் ஆச்சு பாருங்க அவனுக்கு ?...' ஆமாம் $ 3 " அப்படி ஒண்னும் பெரிய உத்தியோகமும் இல்லியே; குமாஸ்தா உத்தியோகம் தானே? அது ஆனதுமே, தொரைக்கி நம்ப வீட்டுலே இருக்க செளகரியப்படலியாம். தனியாப் போயிட்டான் எங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு. நம்ப வீட்டுலே பொறந்து வளந்தவனுக்கு, இப்பொ நம்ப வீடு திடீர்னு செளகரியம் இல்லாமெ போயிடுத்தாம்.... ' த்சொ . . த்சொ . ’’ இவனுக்கு அவன் எவ்வளவு தேவலை, பார்த்தீரா? ' " " στολιούτ " நம்ப தலையாரி முருகனேட மகன்; டிப்டி கலெக்டர் வியைகம். இன்னொருவன் இன்னொருவன இருந்தா, இவ்வளவு பெரிய பதவி கடச்சப்புறம் தான் தலையாரி முருகன் மகன்கறதை சொல்லிக்கவே வெக்கப்படுவானே என்னவோ. அவன் தகப்பனை மறக்காமெ, அவன் படத்தைப் பெரிசா ஹால்லே மாட்டி வச்சு, புஷ்ப மாலையாலே அலங்கரிச்சு வச்சிருந்தான் பார்த்தீரா?..."