பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. ரா 81 சாஸ்திரி பேசாமல் இருந்தார். பழைய நினைவுகள் எல்லாம் அவருக்கும் வந்தன. நாயுடுவே மேலே பேசட்டுமே; கேட் போமே, என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார், ' இன்னிக்கித்தான் பகவான் என் கண்ணை நல்லாத் தறந்து விட்டான். என் கண்ணை மூடி இருந்த அறியாமையைத் தொடச்சி விட்டான். குலத்தளவே ஆகுமாம் குணம்னு பெரியவங்க சொன்னதுக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு இப்பத்தான் புரிஞ்சுது. குலம்கறது பெறவியினலே ஏற்படற நெலமை இருக்கே, அது இல்லே. ஒழுக்கத்தினலே ஏற்படுதே, அந்த நெலமைதான்னு புரியுது. அந்தக் காலத்துலே பெரியவங்க அந்த அர்த்தத்துலே அதைச் சொல்லல்லேன்னக்கூட அந்த அர்த் தத்துலே தான் நாம்ப அதை எடுத்துக்கணும். இல்லையா? நீர் என்ன சொல்றீர்? ' ரொம்ப கரெக்டு நீர் சொல்றது ! ) என்று ஆமோதித்தார் சாஸ்திரி. கா-6;