பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. கி. ரங்கராஜன் 10 சாந்தி பிறந்த நாள் நிகப் பாலிஷை மெல்லிய ஸில்க் கைக்குட்டையினல் மேலோடு துடைத்துப் பள பளவென்று மெருகேற்றிக்கொண் டாள் சாந்தி. பத்து மடங்குக்குக் கர்வம் அவள் தலைக்கேறியது. இந்த விரல் நுனிகளைப் பிடித்துக்கொண்டு விட்டாரானல், பிரியும் நேரம் வருகிற வரையில், சங்கர் விடுவதே கிடையாது. ' உங்களுக்கு என் மீது காதலா, என் விரல்கள் மீதா?’’ என்று சாந்தியே கேட்பதுண்டு. " விரல்களின் மீதுதான், ’’ என்று தயங்காமல் சொல்வான் சங்கர் பிஸினஸ் நண்பர்களில் யார் ஐரோப்பியச் சுற்றுப் பயணம் போனலும் சரி, பாஷன் தலைநகரங்களில், எது சிறப்பான நகப் பூச்செனக் கருதப்படுகிறதோ அதைத் தவருமல் வாங்கி வரும்படி சொல்லி யனுப்புவான். அப்படி, உலகத்தின் பல மூலை களிலிருந்து வந்திருந்த தட்டையும் வட்டமும், குட்டையும் நெட்டையும், வளைவும் நெளிவும், பச்சையும் சிவப்புமான பற் பல பூச்சுக் குப்பிகளை வைப்பதற்கென்றே தனி ஸ்டீல் செட் வாங் கும்படி நேர்ந்தது சாந்திக்கு. சாந்திக்கு அப்பா கிடையாது. பெரியப்பாதான் அவ்வளவு பெரிய எஸ்டேட்டை நிர்வகித்து வந்தார். அவர் விளையாட்டா கச் சாந்தியைக் கேட்டார்.

'இவ்வளவு பழகுகிருனே சங்கர், ஏன் உன்னைக் கல்யா ணம் செய்துகொள்ளுவதைமட்டும் தள்ளிப் போட்டுக் கொண்டே யிருக்கிருன் தெரியுமோ?' என்று.