பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காந்தியத் திட்ட்ம் பணியின் மூலம் கல்வி கற்பதால் ஜனங்கள் தங்கள் பொருளாதார கிலேயை அபிவிருத்தி செய்துகொள்ளும் சக்தியைப் பெறும்படி அது செய்யவேண்டும். அடிப் படைக் கல்வியைப் போலவே முதியோர் கல்வியிலும் பயனுள்ள தொழில் செய்வதன் மூலமே கற்பிக்க வேண்டும். வயதுவந்தவர்கள் ஒரு கைத்தொழிலே கன் முகக் கற்றுக்கொள்வதில், எழுத்து, படிப்பு, கணக்கு ஆகிய மூன்றிலும் தேர்ச்சி பெறுவதுடன், ஆரோக்கியம், சுத்தம், சுகாதாரம், சமூகத்தில் தங்களுக்குள்ள உரிமை கள், கூட்டுறவு முயற்சியின் பயன் ஆகியவைகளேப் பற்றியும் போதுமான அளவு தெரிந்துகொள்வார்கள். கிரியாம்சையில் பயன்படக்கூடிய் பற்பல விஷயங் களேப் பற்றி அறிவிக்கும் மலிவான உபயோகமுள்ள நூல்களேயும் படிப்பில்லாத முதியோர்களின் முன் னேற்றத்திற்காகக் கொடுக்கவேண்டும் என்பது சொல் லாமலே விளங்கும். அத்தகைய பொருத்தமான புத்த கங்கள் இல்லாவிட்டால், அவர்கள் கற்றதை மறந்து, மறுபடி எழுத்தறிவில்லாமற் போய்விடுவார்கள். தேசத் தொண்டில் ஊறியுள்ள கல்ல உபாத்தியாயர்கள் எவ் வளவு அவசியம் என்பதைப் பற்றி அபிப்பிராய பேதமே இருக்க முடியாது. கம் காட்டு முறைப்படியுள்ள நாடகசாலை, ஜனங்கள் சேர்ந்து நடனம் செய்தல், நாடோடி இலக்கியம், பஜனை முதலியவற்றைப் புனருத்தாரனம் செய்தல் ஆகியவை முதியோர் கல்வியில் முக்கிய்மான அங்கமாக அமைய வேண்டும். பாங்கித் தொழிலும் இன்ஷாரன்ஸும் இந்தியாவில் பெரிய அளவில் எவ்விதப் பொரு ளாதாரத் திட்டத்தையும் கிறைவேற்றி வைப்பதில், பல காரியங்களே ; உத்தேசித்து நீண்ட காலத் தவ Aகாயில் கடன் வசதிகள் செய்து கொடுப்பதற்கு வாாளமான மூலதனம் தேவைப்படும். இதல்ை பாங்கித்