பக்கம்:கானகத்தின் குரல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ஜி சிக் லண்டன் புதுமையும் பழமையும் சேர்ந்த கற்பனையில் (Romance; மிகுந்த விருப்பமுடையவர். அவருடைய பண்பையும், வாழ்க்கையையும், நூல்களையும் அறிந்து கொள்வதற்கு இந்த விருப்பமே சரியான சாதனமாகும். அவருடைய வாழ்க்கையின் போக்கு, சமூகக்கொள்கைகள், பொருளிலும், புகழிலும் அவருக்கிருந்த நாட்டம், அவருடைய நூல்களின் பொருள், தன்மை ஆகிய இவையனைத்துமே அவருடைய வாழ்க்கையைக் கவர்ந்த வேகம் மிகுந்த மனோபாவனையிலிருந்தே வலிமை பெற்றன. ஜாக் லண்டன் சான்பிராசிஸ்கோவில் 1876ஜனவரி பன்னிரண்டாம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் மத்திய மேற்குப் பிரதேசத்திலிருந்து கலிபோர்னியாவுக்கு வந்தவர்கள். அவருடைய தந்தை அமெரிக்க உள்நாட்டுப்போரில் கலந்து கொண்டவர். அதில் ஏற்பட்ட காயங்களிலிருந்து அவர் முற்றிலும் குணமடைய வேயில்லை. உடல்நலம் குன்றியும், வயது முதிர்ந்துமிருந்த தந்தையைத்தான் ஜாக் அறிந்திருந்தார். ஜாக்குக்குக் குழந்தைப் பருவத்திலே வைத்த பெயர்ஜான் கிரிப்பத் லண்டன் என்பது. ஆனால் 'ஜாக் என்ற பெயரில் அவருக்கு மிகுந்த விருப்பமிருந்தபடியால் அதே பெயரை அவருடைய ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அவர் எழுதத் தொடங்கியபொழுது அட்லான்டிக் மாசிகை என்ற பத்திரிகை ஆசிரியர்களும் அவருடைய பெயரை மாற்றும்படி செய்ய முடியவில்லை. தாம் இளமைப்பருவத்தில் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிப்பின்னால் ஜாக் லண்டன் சற்று மிகைப்படுத்திக் கூறியுள்ளார் என்று தோன்றுகிறது. கற்பனையிலே நாட்டமுடைய அவரைப்பற்றி இதற்காகத் தவறாக எண்ணக்கூடாது. உடலை வளர்ப்பதற்கு வேண்டிய உணவு கிடைத்தது. ஆரம்பப்பள்ளியில்