பக்கம்:கானகத்தின் குரல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 99 தார்ன்டன் அதன் வாலைப் பிடித்தான். உடனே பக் கரையை நோக்கி தன் முழு பலத்தோடு நீந்தலாயிற்று. ஆனால் கரையை நோக்கிக் கொஞ்ச தூரம்போவதற்குள் வெள்ளம் வெகுதூரம் கீழே அடித்துச் சென்றது. கீழே கொஞ்ச தூரத்திலே பலமான அரவம் கேட்டது. அங்கே பல பாறைகள் நீர்மட்டத்திற்கு மேலே தலையை நீட்டிக்கொண்டிருந்தன. அவற்றிலே வெள்ளம் வேகமாக மோதுவதால் பெரிய ஓசை எழுந்தது. வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேருவதென்பது இயலாத காரியமென்று தார்ன்டன் கண்டுகொண்டான். அதனால் அவன் ஒரு பாறையைப் பிடித்து அதன் மேல் ஏற முயன்றான். ஆனால் அதைப்பிடிக்க முடியவில்லை. வெள்ளம் அவனை மற்றொரு பாதையில் மோதிற்று; பிறகு வேறொரு பாறையிலும் சாடி மேலெல்லாம் காயப்படுத்தியது. அந்தப் பாறை வழுக்கலாக இருந்தாலும் அதை எப்படியோ பிடித்துக்கொண்டு தார்ன்டன் பக்கின் வாலை விட்டான். சாடி மோதும் வெள்ளத்தின் சப்தத்திற்கு மேலாக அவன் குரலெழுப்பி, 'பக், கரைக்குப் போ, போ கரைக்கு என்று கட்டளையிட்டான். வெள்ளம் பக்கை அடித்துக்கொண்டு போயிற்று. பக்கால் நீந்தித் தார்ன்டனை அடைய முடியவில்லை. அதைக் கரைக்குப் போகுமாறு தார்ன்டன் திருப்பித் திருப்பிக் கூவவே பக் அவன் கட்டளையைப் பணிவோடு ஏற்றுக்கொண்டு அவனை ஒருமுறை கடைசி முறையாய் - ஏறெடுத்துப் பார்த்துவிட்டு கரையை நோக்கி நீந்திற்று. வெள்ளம் பயங்கரமாக மோதும் இடத்தை அடைவதற்கு முன்னால் அது கரையோரத்தை நெருங்கிவிட்டது. ஹான்ஸாம் பீட்டும் அதைப்பிடித்து இழுத்துக் கரையேற்றினார்கள். வழுக்கலான பாறையைப் பிடித்துக்கொண்டு அந்த வெள்ளத்திலே வெகு நேரம் நிற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தார்ன்டனுக்கு உதவி புரியக் கரையோரமாக ஓடினார்கள். அங்கிருந்துகொண்டு பக்கின் கழுத்தில் நீண்ட கயிற்றைக்கட்டி அதை ஆற்றுக்குள் போகச் செய்தார்கள். கயிற்றின் ஒரு நுனியை அவர்கள் பிடித்துக் கொண்டனர். பக் வெள்ளத்தில் நீந்தித் தார்ன்டனை அடைந்தால் பிறகு கயிற்றைப் பிடித்துக்கொண்டே அவனும் நாயும் கரை சேர்ந்துவிடலாம். இந்த எண்ணத்தோடுதான் அவர்கள் கயிற்றைப் பக்கின் கழுத்தில் கட்டிவிட்டார்கள். பக் அதைப் புரிந்துகொண்டு தைரியமாக நீந்திச் சென்றது. ஆனால், அது ஆற்றின் குறுக்கே நேராகச் செல்லாமல் சற்றுக் கீழ்நோக்கிச் சென்றதால் வெள்ளம் அதைத் தள்ளிக் கொண்டுபோன வேகத்தில், அது தார்ன்டனை அடைய முடியாமற் போயிற்று. ஆற்றிலே தார்ன்டனுக்கு நேராக பக் வந்தபோது அதற்கும்