பக்கம்:கானகத்தின் குரல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 | கனகத்தின் குரல் தார்ன்டனுக்கும் இடையிலே பல கஜ தூரம் இருந்தது. அங்கிருந்து வெள்ளத்தை எதிர்த்து நீந்தித் தார்ன்டனை அடைவதென்பது முடியாத காரியம். ஹான்ஸ் உடனே கயிற்றை இழுத்தான். படகை இழுப்பதுபோல பக்கையும் இழுத்துக் கரைசேர்க்க அவன் முயன்றான். கயிற்றை இழுத்துப் பிடிக்கவே வெள்ளம் பக்கை அடித்துக்கொண்டு போகாமல் கரையை நோக்கித் தள்ளியது. ஹான்ஸ்-ம் பீட்டும் பக்கைக் கரையேற்றுவதற்குள் அதற்குப் பாதிஉயிர் போய்விட்டது. அது குடித்திருந்த தண்ணிரையெல்லாம் வெளியேற்றி அது நன்கு சுவாசிக்குமாறு அவர்கள் செய்தார்கள். பக் எழுந்து நிற்க முயன்று தடுமாறி விழுந்தது. தார்ன்டனுடைய குரல் ஆற்றுவெள்ளத்தில் மெதுவாகக் கேட்டது. அவன் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருக்கிறா னென்பது தெளிவாகத் தெரிந்தது. எஜமானனுடைய குரல் பக்கின் செவிகளில் மின்சாரம்போல் புகுந்து பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிற்று. அது தாவி எழுந்து ஆற்றின் எதிராகக் கரையில் ஒடிற்று, கழுத்தில் கயிற்றோடு முன்னால் ஆற்றிற்குள் பாய்ந்த இடத்திற்குச் சென்று நின்றது. ஹான்ஸும் பீட்டும் அதைப் பின்தொடர்ந்து வேகமாக வந்தார்கள். மறுபடியும் அதன் கழுத்திலே கயிற்றைக் கட்டினார்கள். பக் வெள்ளத்திலே பாய்ந்தது. இந்தத் தடவை ஆற்றின் குறுக்கே நேராக அது நீந்திச்செல்ல முயன்றது. முன்னால் ஒருமுறை அது தவறிவிட்டது. மறுமுறை தவறுமா? ஹான்ஸ் கயிற்றை விட்டுக் கொண்டே இருந்தான். பீட் சுருணையிலிருந்து கயிற்றை ஒழுங்காகப் பிரித்துவிட்டான். பக் நீந்தி நீந்தித் தார்ன்டன் இருக்குமிடத்திற்கு மேலாகவே சரியாகச் சென்றது. அவனோடு ஒரே நேர்க்கோட்டில் இருப்பதைக் கண்டு பக் மிகுந்த வேகத்துடன் தார்ன்டனை நோக்கி வெள்ளத்தோடேயே சென்றது. தார்ன்டனும் அதைக் கவனித்தான். வெள்ளத்தின் வேகத்தால் பக் தார்ன்டன் மேலேயே மோதிற்று. தார்ன்டன் பாறையை விட்டு விட்டு பக்கின் கழுத்தைத் தன் இரு கைகளினாலும் கோத்து பிடித்துக்கொண்டான். ஹான்ஸ் ஒரு மரத்தில் கயிற்றைச் சுற்றிப்பிடித்தான். அதனால் பக்கையும், தார்ன்டனையும் வெள்ளம் கரையை நோக்கித் தள்ளிற்று. மூச்சு திணறியும் பாறைகளின் மேல் மோதியும் நாயின் மேல் மனிதனும் மனிதன் மேல் நாயுமாகப் புரண்டும் கடைசியாகத் தார்ன்டனும் பக்கும் கரையை அடைந்தனர். தார்ன்டனை ஒரு பெரிய மரக்கட்டையின்மேல் குப்புறப் படுக்க வைத்து ஹான்ஸும், பீட்டும் முன்னும் பின்னுமாக வேகமாகக் குலுக்கினர். அவனுக்கு நல்லுணர்வு பிறந்ததும் பக்கைப் பற்றித்தான் முதலில் கவனித்தான். அது உயிரற்றதுபோலக் கிடந்தது. அதைக் கண்டு நிக் ஊளையிட்டது. ஸ்கீட் அதன் முகத்தையும், மூடிய