பக்கம்:கானகத்தின் குரல்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் ; 105 இதை அங்கு நின்றவர்கள் ஆச்சரியத்தோடு கவனித்தனர். ஏதோ மந்திரம் ஓதுவது அவர்களுக்குத் தோன்றியது. தார்ன்டன் எழுந்து நின்றதும் பக் அவன் கைகளை வாயினாற் கவ்விப்பிடித்தது. பிறகு மெதுவாகக் கையைவிட்டது. இவ்வாறு மெளனமாக அது தன் அன்பை வெளிப்படுத்திற்று. பிறகு தார்ன்டன் எட்டத் தள்ளி நின்றுகொண்டான். 'பக் இனி நீ புறப்பட வேண்டும்' என்றான் அவன். திராஸ்வார்கள் கெட்டியாக நிமிரும்படி பக் முன்னால் சென்று, பிறகு கொஞ்சம் அவற்றைத் தளரவிட்டது. நிற்கும் வண்டியை நகர்த்துவதற்கு அதுதான் நல்ல முறை என்று பக் கண்டிருந்தது. சுற்றிலும் ஒரே நிசப்தம். அந்த நிசப்தத்தைப் பிளந்துகொண்டு தார்ன்டனுடைய குரல் ஓங்கி ஒலித்தது. 'ஜீ புறப்படு." வலதுபக்கமாகத் திரும்பி ஒரு புறத்துத் திராஸ்வாரில் மட்டும் தனது முழு பலத்தையும் கொடுத்து பக் முன்னால் தாவிப் பாய்ந்தது. வண்டியிலிருந்த மூட்டைகள் சற்று அசைந்தன. வட்டைகளில் இறுகியிருந்த பனிக்கட்டிகள் உடைந்து நொறுங்கும் அரவம் கேட்டது. 'ஹா' என்று கூவினான் தார்ன்டன். இப்பொழுது இடதுபக்கத்துத் திராஸ்வாரில் தனது சக்தியைச் செலுத்தி மீண்டும் பக் முன்னால் தாவிப்பாய்ந்தது. பனிக்கட்டிகள் மேலும் நொறுங்கின. சறுக்குவட்டைகள் மேலெழுந்தன. இறுகிய பனிக்கட்டிகளை விட்டுவண்டி இடம்பெயர்ந்துவிட்டது. கூடியிருந்த மக்கள் மூச்சு விடாமல் பார்த்திருந்தனர். 'மஷ், இழு" என்று மேலும் கூவினான் தார்ன்டன். துப்பாக்கி வெடிபோல அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது. பக் முன்னால் பாய்ந்தது. அதன் உடம்பைக் குறுக்கி நின்று அது பெருமுயற்சி செய்தது. தசைநார்கள் முறுக்கேறின; பளபளப்பான உரோமத்திற்கடியிலே அவைகள் உருண்டு திரண்டன. பக்கின் அகன்ற மார்பு தரையோடு தரையாகப் படிந்தது. கால்கள் பரபரவென்று பனிக்குள்ளே ஊன்றி உந்தின; அவற்றின் வேகத்தால் பெரிய பள்ளங்கள் தோன்றின. சறுக்குவண்டி ஆடியது. அசைந்தது. முன்னால் நகர்வதுபோலத் தோன்றியது. பக்கின் ஒரு கால் வழுக்கிவிட்டது. மறுபடியும் அது முயன்றது. யாரோ ஒருவன் திணறிப்பெருமூச்சுவிட்டான். குலுங்கிக் குலுங்கி வண்டி நகரலாயிற்று. அரை அங்குலம்... ஒர் அங்குலம்... இரண்டங்குலம். இப்படி வண்டி நகர்ந்தது. பிறகு குலுங்கி நகருவது மாறி வண்டி ஒழுங்காக முன்னால் மெதுவாகச் செல்லத் தொடங்கியது. அந்த