பக்கம்:கானகத்தின் குரல்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கானகத்தின் குரல் வழியிலேயே மெதுவாகச் செல்லத் தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரம் வரையில் ஓநாய் அதனுடனேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வந்தது, பிறகு அது தரையில் அமர்ந்து வானை நோக்கி ஊளையிடத்தொடங்கியது. துயரம் நிரம்பியதாக அதன் குரல் ஒலித்தது. பக் அங்கே நிற்காமல் திரும்பிவந்துகொண்டே இருந்தது. ஒநாயின் துயரக்குரல் தூரத்திலே மெதுவாகக் குறைந்து கடைசியில் செவிகளுக்கே எட்டாமற்போயிற்று. இரவு நேரத்தில் முகாமுக்குள்பக் நுழைந்தபோது ஜான் தார்ன்டன் உணவருந்திக்கொண்டிருந்தான். அன்பின் வேகத்தால் தூண்டப்பட்டு பக் அவன் மேல் பாய்ந்து, அவனைக் கீழே விழச்செய்து, அவனுடைய முகத்தை நக்கத்தொடங்கிற்று; வழக்கம் போல் கையைப்பிடித்துக் கடிக்கவும் செய்த்து. ஜான் தார்ன்டன் அதைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே அதன் தலையைப் பிடித்து முன்னும் பின்னும் ஆட்டத் தொடங்கினான். இரண்டு நாள் இரவும் பகலும் பக் முகாமைவிட்டு வெளியறேவுமில்லை; தார்ன்டனுடைய பார்வையிலிருந்து அப்பாற் செல்லவுமில்லை. அவன் வேலை செய்யும்போதும் உணவருந்தும் போதும், இரவிலே கம்பளியால் போர்த்துக்கொண்டு உறங்கும் போதும் உறங்கி எழுந்திருக்கும்போதும் அவனருகிலேயே இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குப்பிறகு கானகத்திலிருந்து மீண்டும் அந்தக் குரலின் அழைப்பு முன்னைக் காட்டிலும் கம்பீரமாக ஒலித்தது. பக் மீண்டும் அமைதியை இழந்தது. ஒநாயின் நினைவும், காடுகளின் வழியாக ஓநாயோடு ஒடிக்கொண்டிருந்த நினைவும் சதா வரலாயின. மீண்டும் அது கானகத்திற்குள் புகுந்து திரியத் தொடங்கியது; ஆனால் அந்த ஒநாய் மீண்டும் அதனிடம் வரவில்லை. பக் எவ்வளவோ கூர்ந்து கவனித்தும் ஓநாயின் துயரக்குரலும் காதில் விழவில்லை. முகாமைவிட்டு நீங்கித்தொடர்ந்து பல நாட்கள் வெளியில் சுற்றித்திரியவும், இரவிலே வெளியிலே உறங்கவும் அது தொடங்கியது. ஒரு தடவை அது மீண்டும் அந்தக் குன்றைக் கடந்து அதன் மறுபுறத்திலுள்ள ஓடைகளின் அருகிலும் காடுகளில் புகுந்தும் சுற்றிற்று. அந்த ஒநாயைத்தேடி அது ஒரு வாரம் வரையிலும் வீணாக அலைந்தது. அப்படி அலையும்போது எதிர்ப்பட்ட பிராணிகளை அது தன் உணவிற்காகக் கொன்றது. கடலிற் சென்று கலக்கும் ஒருபெரிய ஒடையிலே அது சால்மன் மீனை நாடி வேட்டையாடிற்று. அந்த ஒடையிலே மீனை நாடி வந்த ஒரு பெரிய கருங்கரடியை ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்துக்கொண்டு அதன் கண்களை மறைக்கவே, அது செய்வதையறியாமல் பயங்கரமாகக் சீறிக்கொண்டு