பக்கம்:கானகத்தின் குரல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கனகத்தின் குரல் உண்டாக்கிய புதிய வாழ்க்கை யல்ல அது. உற்றுக்கேட்டுக் கொண்டும், மோப்பம் பிடித்துக்கொண்டும் பக் எழுந்துசென்றது. வெகு தூரத்திலே ஏதோ ஒன்று குரைக்கும் சப்தம் லேசாகக் கேட்டது. அந்தக் குரலைத் தொடர்ந்து அதைப்போன்ற பல குரல்கள் எழுந்தன. கொஞ்ச நேரத்தில் அந்தக் குரல்கள் அண்மையிலும், உரத்தும் கேட்டன. தனது நினைவிலே நிலை பெற்றிருந்த பழைய உலகத்திலே கேட்கின்ற குரல்கள்போல அவை பக்குக்குத் தோன்றின. வெட்டவெளியின் மையத்திற்குச் சென்று மறுபடியும் உற்றுக் கேட்டது. அதே குரலின் அழைப்புதான். முன்னைவிட மிகுந்த கவர்ச்சியோடும், வற்புறுத்தலோடும் அந்த அழைப்பு ஒலித்தது. அந்த அழைப்பிற்குச் செவிசாய்க்க இப்பொழுது பக் தயாராக இருந்தது. ஜான் தார்ன்டன் இறந்து விட்டான். அவனோடு மனிதஉலகத்தின் கடைசித்தொடர்பும் அறுந்துவிட்டது. மனிதனும் மனிதஉரிமையும் இப்பொழுது அதைக் கட்டுப்படுத்தவில்லை. புதிய இடங்களை நாடிவரும் பணிமான்களை ஈஹட்டுக்கள் வேட்டையாடுவதுபோல வேட்டையாடிக்கொண்டு, ஓடைகளும் காடுகளும் நிறைந்த பிரதேசத்தைக் கடந்து பக் இருந்த பள்ளத்தாக்கிற்கு ஒநாய்க்கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்தது. நிலவொளி பொழிந்துகொண்டிருக்கும் வெட்டவெளிக்கு அந்த ஒநாய்கள் வந்து சேர்ந்தன. அதன் மையத்திலே சிலை போல அசையாமல் ஓநாய்களின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு பக் நின்றது. அப்பெரியஉருவம் அசைவற்று நிற்பதைக்கண்டு அவை திகைத்தன. கொஞ்சநேரத்திற்குப் பிறகு அவைகளிலே மிகவும் தைரியமுள்ள ஒர் ஒநாய் பக்கை நோக்கி முன்னால் தாவி வந்தது. மின்னல்வேகத்தில் பக் அதன் மீது மோதி அதன் கழுத்தை ஒடித்தது. பிறகு முன்போல அசையாமல் நின்றது. அடிபட்ட ஓநாய் அதன் பின்னே விழுந்து வலி பொறுக்காமல் புரண்டு கொண்டிருந்தது. பிறகு ஒன்றை ஒன்று தொடர்ந்து மூன்று ஒநாய்கள் பக்கை எதிர்த்தன. அவைகள் ஒவ்வொன்றும் இரத்தம் பீறிட்டுக்கொண்டும், குரல்வளையும் தோள்களும் கிழிபட்டும் திரும்பி ஓடின. இதைக் கண்டதும் அந்த ஒநாய்க்கூட்டம் முழுவதும் ஒன்றின்மேல் ஒன்று விழுந்துகொண்டு நெருக்கமாக முன்வந்து பக்கைத் தாக்க தொடங்கிற்று. பக்கின் அற்புதமான வேகமும், சுறுசுறுப்பும் இந்தச் சமயத்தில் நன்கு உதவின. பின்னங்கால்களைப் பக் நன்றாக ஊன்றிக்கொண்டு எல்லாப் பக்கங்களிலும் சுற்றிச் சுற்றி வேகமாகப் பாய்ந்துபாய்ந்து தாக்கியது. மிக விரைவிலே அது ஒவ்வொரு பக்கமும் திரும்புவதால் ஒரே சமயத்தில் அது எங்கும் இருப்பதாகத் தோன்றியது. தனக்குப் பின்புறத்திலே ஓநாய்கள் வந்து