பக்கம்:கானகத்தின் குரல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಜ್ಞ೪5 #ಣ'ಒಳ# { 3 } நாவலில் கதாநாயகன் ஒர் எழுத்தாளனாக வெற்றியடைநதது: டிய அவருக்கு இந்த 'ಫಿಫ್) & ಟಿಃ ,

  • :ہ:چ۔ہ:مہ
ைதினசரி எழுத்துவேலை கசந்தது. வர் நீண்டநாள் சகிக்கமுடியவில்லை.

ஆதலால் 1902 ஜூலை யில் தென்னாப்பிரிக்காவுக்கு விசேஷ #", - . . : - و ہ “ پ جم و * f. * و " جم که به ه من " - --- நிருபராகச் செல்லுமாறு அழைப்பு வரவே ஆர்வத்தோடுஅதை - 。 s t ~ * * . . . . . . . - * : . . حي * , o, ஏற்றுக்கொண்டார். போயர் புத்தத்தைப் பற்றிச் செய்தி அனுப்புவதற்காக அசோசியேட்டட் பிரஸ் அவரை நியமித்தது. ஆனால் நியூயார்க் சேரும்போதே சமாதானப் பேச்சு நடைபெறு: வதாகச் செய்தி கிடைத்தது. இருந்தாலும் ஜாக் தொடர்ந்து பிரயாணம் செய்தார். மாக்மில்லன் கம்பெனியார் லண்டன் நகரத்துச் சேரி வாழ்க்கையின் நிலைமை பற்றி ஒர் புத்தகம் எழுதப் பணித்தார்கள். அவர் லண்டனில் ஏழு வாரங்களிலிருந்து கவனித்ததன் பயனாக ஆழ்குழியில் வாழும் மக்கள் (The children of the abyss என்ற நூலை எழுதினார். வீடு திரும்பியபின் சில நாட்களில் மனைவியை விட்டுப் பிரிந்தார். அடுத்த வசந்தகாலத்தில் ஜப்பானுக்குப் பயணமானார். ரஷ்ய-ஜப்பான் யுத்தத்தைப் பற்றி எழுத நிருபராகச் சென்றார். மீண்டும் வீடு சேர்ந்ததும் பழையபடி சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவில் கப்பல் ஒட்டினார். சோஷலிஸ்டு கட்சியின் சார்பாக ஒக்லாந்து மேயர் பதவிக்குப் போட்டியிட்டார். கிளென் எல்லனுக்குப் பக்கத்தில் 129 ஏக்கர் பரப்புள்ள ஒர் பண்ணையை வாங்கினார். சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று வந்தார். மறுபடியும் கல்யாணம் செய்து கொண்டார். இவையெல்லாம் 1905-ஆம் ஆண்டிலேயே நடந்தன. அடுத்த ஆண்டில் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வந்தார். பிறகு பண்ணையை அபிவிருத்தி செய்வதற்காகச் செலவுமிக்க பெரிய திட்டங்கள் வகுத்தார். அவற்றிற்கு மத்தியிலேயே அவர் ஒர் ஐம்பதடி நீளமுள்ள படகிலே உலகத்தைச் சுற்றிவர ஏற்பாடுகளெல்லாம் செய்து வந்தார். பண்ணையை அபிவிருத்தி செய்யவும், அதில் ஒரு மாளிகை கட்டவும், படகு ஒன்று உருவாக்கவும் வேண்டிய பணத்திற்காக அவர் சதா எழுதிக்கொண்டிருந்தார். ‘ஸ்நார்க் என்ற படகைக் கட்டி உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டார். ஆனால் பாலிசீனியாவிலே அந்தப் பிரயாணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. ஜாக் லண்டனுக்கு ஏதோ ஒரு விதமான நோய் ஏற்பட்டிருந்தது. கப்பலில் சென்றதால் அந்த நோய் அதிகரித்தது. அதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு