பக்கம்:கானகத்தின் குரல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 கனகத்தின் குரல் பிரயாணத்தைக் கைவிட்டுவிட்டு சிட்னியில் படகை விற்று விட்டார். பிறகு ஈக்வடார், பனாமா, வழியாக ஆறு மாதத்தில் திரும்பி வீடு வந்து சேர்ந்தார். இந்தப் பிரயாணம் பல சுவையான சம்பவங்களும் துணிகரச் செயல்களும் நிறைந்தது. அவற்றைப் பற்றி எல்லாம் அவர் மனைவி சார்மியன் லண்டன் எழுதிய நூலிலும், அவரே எழுதிய ஸ்நார்க் கப்பல் பிரயாணம் என்ற நூலிலும் காணலாம். ஜாக் சதா எழுதிக்கொண்டே இருந்தார். இந்தப் பிரயாணத்தின்போது ஆறு புத்தகங்களும், மேலும் ஒன்றிரண்டு புத்தகங்களாகக் கூடிய கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். ஜாக் லண்டனின் இறுதி ஆறு ஆண்டுகளிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளே நிறைந்திருந்தன. பசிபிக் சமுத்திரக் கரையோரத் திலுள்ள பிரதேசத்தில் நான்கு குதிரை பூட்டிய வண்டியில் பிரயாணம் செய்தார். ஹார்ன் பிரதேசத்திற்கும் மெக்ஸிக்கோவுக்கும் ஹவாய் தீவுகளுக்கும் சென்று வந்தார். அவருடைய பண்ணை அப்பொழுது 1,300 ஏக்கர் கொண்டதாக இருந்தது. அதில் அவர் நல்ல பண்ணைப்பிராணிகளை வளர்த்தார். 75 ஏக்கரில் திராட்சைக்கொடி பயிர் செய்தார். ஒரு லட்சம் கற்பூரத்தைல மரங்களை வைத்தார். இன்னும் பல வகையான அபிவிருத்திகளும் செய்தார். அதே சமயத்தில் இடைவிடாது எழுதிக்கொண்டுமிருந்தார். அவர் தமது நாற்பதாவது வயதில் 1916 நவம்பர் 22ம் தேதியன்று காலமானார். அவருடைய வாழ்க்கைச்சரிதத்தை எழுதிய அவருடைய மனைவி கூறுவது போல் மிகுந்த அலுப்பினாலேயே உயிர் நீத்தார். அவருடைய புகழ் பல நாடுகளிலும் பரவியது. ரஷ்யாவில் அவருக்கு மிகுந்த புகழ்உண்டு. 1918-க்கு முன்னாலேயே அவருடைய நூல்கள் அனைத்திற்கும் இரண்டு பதிப்புக்கள் அங்கு வெளியாயின. பிரான்ஸிலும் அதே மாதிரி அவருடைய நூல்களை மக்கள் படித்தார்கள். அவருடைய முக்கியமான நூல்கள் ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான மொழிகளிலெல்லாம் பெயர்க்கப் பட்டுள்ளன. அவர் ஒரு சராசரி அமெரிக்கர் என்று பிற நாட்டினர் மதித்தனர். அமெரிக்க நாட்டுத் தனித்தன்மைகள் அவரிடமிருந்தன. சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கையின் இடையிலேயே அவர் தத்துவசாஸ்திரத்தைப் படிக்கவும் நேரம் கண்டார். பரந்த கருத்துக்களிலும் எல்லாவற்றையும் விளக்க முற்படும் தத்துவ முறைகளிலும் அவருக்கு மிகுந்த ஆர்வமுண்டு. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் அவருக்குண்டு. ஆனால் புலமைக்கு வேண்டிய பொறுமை அவருக்கில்லை. உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தையே அவருடைய கருத்துக்கள் பெரும்பாலும்