பக்கம்:கானகத்தின் குரல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 33 கர்லி உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளிப்பதற்குள் பக்கிற்கு மற்றோர் அதிர்ச்சி உண்டாயிற்று. பிரான்சுவா அதன் முதுகில் தோல் பட்டைகளையும், வார்களையும் இழுத்துக் கட்டினான். குதிரைகளுக்கு இவ்வாறு சேணம் போடுவதை அது கண்டதுண்டு. குதிரைகள் வேலை செய்வது போல இப்பொழுது பக் வேலை செய்ய வேண்டும். பனிக்கட்டியின் மீது வழுக்கி வழுக்கிச் செல்லும் சறுக்குவண்டியிலே பிரான்சுவாவைக் காட்டிற்கு இழுத்துச் செல்லவேண்டும். அங்கிருந்து விறகுக்கட்டையையும் ஏற்றிக் கொண்டு திரும்ப வேண்டும். இவ்வாறு வண்டியிழுப்பதால் தனது அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்படுவதை பக் உணர்ந்தது. இருந்தாலும் அது எதிர்த்துக் கலகம் செய்யாமல் அடக்கி நடக்கலாயிற்று. தன்னால் இயன்றவரை அது உறுதியோடு சிரமப்பட்டு வண்டி இழுத்தது. பிரான்சுவா கண்டிப்பானவன். அவன் விருப்பப்படி உடனே நடந்தாக வேண்டும். அப்படி நடக்க வைப்பதற்கு அவன் கையிலிருந்த சாட்டை உதவி செய்தது. சறுக்குவண்டியிழுப்பதில் டேவுக்குப் பழக்கமுண்டு. பக் சரியானபடி பாதையில் போகாத சமயத்திலெல்லாம் அது பக்கின் பின்புறத்திலே கடித்தது. ஸ்பிட்ஸ் தலைமைப்பதவி வகித்து முன்னால் சென்றது. அதற்கு வண்டியிழுத்துப் பழக்கமுண்டு. பக் தவறு செய்யும்போதெல்லாம் அது உறுமிற்று. பக் சுலபமாகப் பழகிக்கொண்டது. அந்த இரண்டு நாய்களின் உதவியாலும் பிரான்சுவாவின் உதவியாலும் அது மிகவும் முன்னேற்றமடைந்தது. ஹோ என்றால் நிற்க வேண்டும், மஷ' என்றால் போக வேண்டும் என்றும் அது தெரிந்துகொண்டது. 'மூனும் நல்ல நாய்கள். அந்த பக் இருக்குதே அது பிசாசு மாதிரி இழுக்குது. சட்டென்று எல்லாம் அது பழகிக்கும்' என்று பிரான்சுவா பெரோல்ட்டிடம் தெரிவித்தான். கடிதங்களை எடுத்துக்கொண்டு புறப்படவேண்டும் என்று பெரோல்ட் அவசரப்பட்டான். மாலை நேரத்திற்குள் அவன் பில்லி, ஜோ என்று மேலும் இரண்டு நாய்களைக் கொண்டு வந்தான். அவைகள் இரண்டும் உடன்பிறந்தவை; எஸ்கிமோ நாய்கள். ஒரே தாய்க்குப் பிறந்தவையானாலும் இரவும் பகலும்போல அவை குணத்தில் மாறுபட்டிருந்தன. பில்லி மிக மிக நல்ல சுபாவம் உடையது. ஜோ இதற்கு நேர்மாறானது. அது எப்பொழுதும் வெடுவெடுப்பாக இருக்கும். சதா சீறும். அதன் கண்களில் தீய சிந்தனை குடிகொண்டிருக்கும். அந்த இரு நாய்களையும் தோழமை பாராட்டிப் பக் வரவேற்றது; டேவ் அவற்றைக் கவனிக்கவே இல்லை. பிட்ஸ் அவற்றைத் தனித் தனியாகப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. சமாதானத்தை நாடி