பக்கம்:கானகத்தின் குரல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கானகத்தின் குரல் ஆழ்ந்தது. அந்த நாள் முழுவதும் எத்தனையோ சிரமங்கள். ஆகையால் அதற்கு நல்ல தூக்கம் வந்ததென்றாலும், பலவகையான கனவுகளைக் கண்டு தூக்கத்திலேயே உறுமிக் கொண்டும் குரைத்துக்கொண்டுமிருந்தது. மறுநாட்காலையில் முகாமிலே ஏற்பட்ட ஆரவாரத்தைக் கேட்கும் வரையில் பக் விழிக்கவில்லை. முதலில் அதற்குத் தான் இருக்கும் இடமே தெரியவில்லை. இரவெல்லாம் பனி விழுந்து குழியை நன்றாக மூடிவிட்டது. நான்கு பக்கங்களிலும் பணிச்சுவர்கள் அதன் உடம்பின்மேல் அழுத்தலாயின. வலையில் அகப்பட்டுக் கொண்டது போல் அதற்கு ஒரு பெரிய பயம் பிடித்தது. அது மிகவும் நாகரிகமடைந்த நாய், அதற்கு வலையில் அகப்படும் அனுபவம் ஏற்பட்டதே கிடையாது. இருந்தாலும் அந்த பயம் உண்டாயிற்று. அதற்குள்ளே மறைந்துகிடந்த அதன் மூதாதையர்களின் பயங்கர அனுபவம் எப்படியோ மேலெழுந்து விட்டது. அதன் உடம்பிலுள்ள தசைநார்களெல்லாம் தாமாகவே துடித்தன. அதன் கழுத்திலும் தோள்களிலும் உள்ள ரோமம் சிலிர்த்தது. பக் மூர்க்கமாகச் சீறிக்கொண்டு துள்ளிக் குதித்தது. அதைச் சுற்றியிருந்த உறைபனி நாலாபக்கமும் தெறித்து விழுந்தது. பக் துள்ளிக்குதித்து நின்றபோது எதிரில் இருந்த முகாம் அதன் கண்ணில்பட்டது. அப்பொழுதுதான் அதற்குத் தான் இருக்குமிடம் எதுவென்று புலனாயிற்று. மானுவெலோடு வெளியே புறப்பட்டது முதல் பணியிலே குழிதோண்டிப் படுத்தது வரை நடந்த நிகழ்ச்சி களெல்லாம் அதன் நினைவிற்கு வந்தன. பக்கைப் பார்த்ததும் பிரான்சுவா உரக்கக் கூவினான். 'இந்தப் பக் சீக்கிரம் எல்லாம் பழகிக்கொள்ளும் என்று நான் சொன்னது சரிதானே? என்று அவன் பெரோல்ட்டைக் கேட்டான். பெரோல்ட் தலையை அசைத்து ஆமோதித்தான். கனடா அரசாங்கத்தின் முக்கியமான கடிதங்களை எடுத்துச்செல்கின்றவன் என்ற முறையிலே நல்ல நாய்களைத் தேடிப்பிடிக்க வேண்டுமென்று அவன் கவலை கொண்டிருந்தான். பக் கிடைத்ததைப் பற்றி அவனுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி. ஒருமணி நேரத்திற்குள்ளே மேலும் மூன்று எஸ்கிமோ நாய்கள் அந்தக் கோஷ்டியில் சேர்க்கப்படவே மொத்தம் ஒன்பது நாய்களாயின. கால்மணியிலே அவற்றிற்கெல்லாம் வார்ப்பட்டை களால் சேணம் போட்டாயிற்று. அவைகள் டையேகானன் என்ற இடத்தை நோக்கி உறைபனிப்பாதையிலே சறுக்கு வண்டியை இழுத்துக்கொண்டு புறப்பட்டன. அந்த இடத்தைவிட்டுப் போவதில்