பக்கம்:கானகத்தின் குரல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4|| irيها தலைமைப்பதவி 'டேம், நான் சொன்னதெப்படி? அந்த பக் ரெட்டைப் பிசாசுதானே?" ஸ்பிட்ஸ் மறைந்ததையும், பக் உடம்பெல்லாம் காயமுற்றிருப்பதையும் கண்ட பிரான்சுவா இவ்வாறு மறுநாட் காலையில் கூறினான்; பக்கைத் தீக்கருகில் பிடித்துச் சென்று அதன் காயங்களை கவனித்தான். பக்கின் மேலே தென்பட்ட படுகாயங்களை நோக்கிய பெரோல்ட், ஸ்பிட்ஸ் சரியான சண்டை போட்டிருக்கிறது.' என்றான். 'பக் மட்டும் சம்மா விட்டதா? ரெட்டிப்புச்சண்டை போட்டிருக்கிறது. சரி. இனி நாம் வேகமாகச் செல்லலாம். ஸ்பிட்ஸ் போய்விட்டது. அதனால் தொல்லையும்போச்சு' என்றான் பிரான்சுவா. சறுக்குவண்டியிலே பெரோல்ட் கூடாரச்சாமான்களை ஏற்றிக் கொண்டிருந்தான். பிரான்சுவா நாய்களுக்குச் சேணமிட்டு வண்டியில் பூட்டத்தொடங்கினான். தலைமைப்பதவியில் ஸ்பிட்ஸ் நிற்கக்கூடிய இடத்திற்கு ஒடி பக் நின்றது. அதைக் கவனியாமல் அந்த இடத்திற்கு பிரான்சுவா சோலெக்ஸைக்கொண்டு வந்தான். சோலெக்ஸ்தான் இனித் தலைமைப்பதவிக்கு மிகவும் ஏற்றது என்பது அவன் எண்ணம். பக் கோபத்தோடு சோலெக்ஸின் மேல் பாய்ந்து அதை விரட்டிவிட்டு முதலிடத்தில் நின்றது.