பக்கம்:கானகத்தின் குரல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக்லண்டன் 61 பிரான்சுவா களிப்போடு தொடையைத் தட்டிக்கொண்டு, 'ஆஹா, அப்படியா? ஸ்பிட்ஸைக் கொன்றுவிட்டதால் அதன் இடம் உனக்கு வேணுமென்ற நினைப்பா? என்று கூவினான். 'உஸ், எட்டப்போ' என்று அவன் அதட்டினான்; ஆனால் பக் அசையவில்லை. அதன் கழுத்தைப் பிடித்து அவன் இழுத்துக் கொண்டு போனான். பக் உறுமி அச்சுறுத்த முயன்றது. ஆனால், பிரான்சுவா அதை ஒரு புறமாக இழுத்துவிட்டுவிட்டு சோலெக்ஸ்ை முதலிடத்திற்குக் கொண்டுபோனான். வயது முதிர்ந்த அந்த நாய்க்கு அது விருப்பமில்லை. பக்கிடம் அதற்குள்ள பயத்தை அது வெளிப்படையாகக் காட்டிற்று. பிரான்சுவா தனது முயற்சியில் விடாப்பிடியாக இருந்தான். ஆனால் அவன் சற்று மறுபக்கம் திரும்பியவுடன் சோலெக்ஸைத் துரத்திவிட்டு பக் முதலிடத்தில் நின்றுகொண்டது. விட்டுக்கொடுக்க சோலெக்ஸும் தயாராகவே இருந்தது. பிரான்சுவா கோபங்கொண்டான். 'அப்படியா சங்கதி? இப்போ பார்' என்று அவன் கையில் தடியெடுத்து வந்தான். சிவப்பு மேலங்கிக்காரனை பக் நினைத்துப்பார்த்தது; உடனே அந்த இடத்தைவிட்டு மெதுவாகப் பின்வாங்கியது. மறுபடியும் சோலெக்ஸை முதலிடத்தில் பூட்டியபோதும் அதன் மீது பக் பாய முயலவில்லை. ஆனால் தடிக்கு அகப்படாமல் எட்டவே வட்டமிட்டுக்கொண்டு கோபத்தோடு சீறியது. தடியை வீசியெறிந்தாலும் தன் மேல் படாதவாறு அது எச்சரிக்கையோடிருந்தது. தடியின் விஷயம் அதற்கு நன்கு தெரியுமல்லவா? பிரான்சுவா தன் வேலையில் ஈடுபட்டான். மற்ற நாய்களைப் பூட்டிவிட்டு டேவுக்கு முன்னால் பக்கைப் பூட்ட அதை அழைத்தான். பக் இரண்டு மூன்றடி பின்னால் நகர்ந்தது. பிரான்சுவா கொஞ்சதூரம் அதன் அருகில் வந்தான். அதைக்கண்டு பக் மேலும் பின்னால் சென்றது. பிரான்சுவா இவ்வாறு சில தடவை அதன் அருகே வர முயன்றும் அவன் கருத்து நிறைவேறவில்லை. அடி கிடைக்குமென்று பயந்துத்ான் பக் பின்னடைகின்றதென்று நினைத்து, அவன் தடியைக் கீழே போட்டுவிட்டான். ஆனால் பக் அவனை வெளிப்படையாகவே எதிர்த்து நின்றது. தடியடிக்குத் தப்ப வேண்டுமென்று அல்ல; தலைமை ஸ்தானத்தை அடையவே அது விரும்பிற்று. அந்த ஸ்தானத்தைப் பெற அதற்கு உரிமை உண்டு. தானே உழைத்துச் சம்பாதித்த ஸ்தானம் அது. அதனால் அதைப் பெறாமல் பக் திருப்தியடையாது.