பக்கம்:கானகத்தின் குரல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்டன் என்பது ஆயுசு 1876-1916, ஜனனம் லான் பிரான்லிஸ்கோவில் நாடோடியாக ஜோசியம் பார்த்துத் திரிந்த வில்லியம் ஹென்ரி என்பவருக்குப் பிறந்தவர். ஜாக்லண்டனும் தகப்பனாருடைய நாடோடிக்குணத்தைப் பெற்றிருந்தார். இவருக்கு ஜெர்மன் சித்தாந்திகளான நீட்ஷேயிடமும் மார்க்ஸிடமும் அபார பக்தி, அவரது கருத்துக்கள் யாவும் நீட்ஷேயும், மார்க்ஸும் மனசில் ஏற்றிய பெளரஷ சித்தாத்தங்கள், வாழ்வு கொடுத்த கைப்பு ஆகிய இரண்டின் மலர்ச்சி சக்தி உபாசகன், அமானுஷ்ய உபாசகன் என்று சொல்ல வேண்டிய நீட்ஷே. சகல தர்மங்களும் கவந்த பத்தத்தினடியாகவே பிறந்தவை என்று சொல்லும் மார்க்ஸ், ட்ஷே ஆகியவர்களே நாடோடியின் மனசில் தர்மஸ்தாபகர்கள் என நிர்ணயமானது இயல்பு. - புதுமைப்பித்தன்