பக்கம்:கானகத்தின் குரல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜக் லண்டன் 73 களைத்துப்போயிற்று. அதற்குக் காரணம் உண்டு. பிரயாணம் தொடங்கி ஐந்து மாதங்களுக்குள் அவை இரண்டாயிரத்தைந்நூறு மைல்கள் சென்றிருக்கின்றன. கடைசி ஆயிரத்தெண்ணுறு மைல்கள் பிரயாணம் செய்யுங்காலத்தில் அவைகளுக்கு ஐந்து நாட்களே ஓய்வு கிடைத்தது. ஸ்காக்வேயை அடையும்போது அவைகளின் கால்கள் முற்றிலும் ஓய்ந்துபோயின. திராஸ் வார்களைத் தளரவிடாமல் நாய்களால் வண்டியை இழுக்க முடியவில்லை. பாதை சரிவாக இருக்கும்போது வண்டி தானாக வேகமாக முன்னால் நகரும்; அந்தச் சமயத்தில் வண்டிக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் முன்னால் ஒடுவதே அவைகளுக்குச் சிரமமாக இருந்தது. ஸ்காக்வேயின் முக்கியமான வீதியின் வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது வண்டியோட்டி, “போங்கள், போங்கள் இனி உங்களுக்கு ரொம்ப நாள் ஓய்வு கிடைக்கும்' என்று அவற்றை உற்சாகப்படுத்தினான். நீண்ட ஒய்வு கிடைக்கு மென்றுதான் வண்டியோட்டிகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஆயிரத்திருநூறு மைல்கள் பிரயாணம் செய்திருக்கிறார்கள்; இடையில் இரண்டே நாட்கள் ஒய்வு கிடைத்தது. அதனால் அவர்கள் உல்லாசமாகச் சுற்றித்திரிந்து அலுப்பைப் போக்கிக்கொள்ளப் பல நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டியது நியாயமாகும். ஆனால், எத்தனையோ பேர்கள் கிளாண்டைக் பிரதேசத்துக்குத் தங்கந்தேடி ஒடியிருக்கிறார்கள். அவர்களுடைய காதலிகளும், மனைவிகளும், உற்றார் உறவினரும் அவர்களோடு வரவில்லை. கூட வராதவர்களிடமிருந்து கடிதங்கள் வந்து மலையாகக் குவிந்துகொண்டிருக்கின்றன. அரசாங்க உத்திரவுகளும் பிறந்தன. சோர்ந்துபோன நாய்களை நீக்கிவிட்டுப் புதிய ஹட்ஸன்குடா நாய்களைக்கொண்டு வண்டிகள் விரைவில் புறப்பட வேண்டும். பயனற்ற நாய்களை விற்றுவிடலாம். தபால் வருமானத்திற்கு முன்னால் நாய்கள் ஒரு பொருட்டல்ல. மூன்று நாட்கள் கழிந்தன. பக்கும் மற்ற நாய்களும் களைப்புடனும் பலவீனத்துடனுமிருந்தன. நான்காம் நாட்காலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து வந்த இருவர் அவைகளைச் சேணம் முதலியவற்றோடு சேர்த்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் பெயர் ஹால்: மற்றவன் சார்லஸ். சார்லஸ் நடுத்தர வயதுடையவன். அவனுடைய மங்கிய கண்களில் எப்போதும் கண்ணிர் ஒழுகுவதுபோலத் தோன்றும். அவன் மீசைகளை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான். ஹால் இளைஞன், அவனுக்குப் பத்தொன்பது இருபது