பக்கம்:கானகத்தின் குரல்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப் காணகத்தின் குரல் படர்ந்திருந்த பனிப்பாதையில் வண்டி சென்றது. பக் தலையைத் தூக்கிப்பார்த்தது. தலைமைப்பதவியில் பைக் சென்றது; அதன் பின்னால் ஜோவும் டீக்கும் சென்றன; நான்காவதாகச் சென்றது சோலெக்ஸ். நெண்டிக்கொண்டும்தடுமாறிக்கொண்டும்.அவை எட்டு வைத்தன. மெர்லிடிஸ் வண்டியில் அமர்ந்திருந்தாள். ஹால் வண்டியைச் செலுத்தினான்; சார்லஸ் வண்டியின் பின்னால் இடறி இடறிச்சென்றான். அவர்களைப் பக் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தார்ன்டன் அதன் உடம்பைத் தடவிப்பார்த்தான். ஏதாவது எலும்பு முறிந்திருக்கிறதாவென்று அவன் ஆராய்ந்தான். எலும்பு ஒன்றும் முறியவில்லை; காயங்கள்தான் நிறைய இருந்தன. பட்டினியால் பக் துரும்பாக இளைத்துக்கிடந்தது. கால்மைல் துரத்திலே வண்டி கண்ணுக்குப் புலனாயிற்று. பனிக்கட்டிகளின்மேல் அது ஊர்ந்து செல்லுவதைப் பக் கவனித்தது தார்ன்டனும் பார்த்தான். வண்டியின் பின்பகுதி குழியில் றங்கியதுபோல் திடீரென்று மறைந்தது; அதே சமயத்தில் ஹாலும் பணியினடியில் மறைந்தான். மெர்விடிஸ் வீறிட்டு அலறிய குரல் கேட்டது. சார்லஸ் திரும்பித் தப்பி ஓடக் காலெடுத்து வைத்தான். ஆனால், அந்தச் சமயத்தில் பெரும்பகுதியான பனிக்கட்டிப்பரப்பு ஆற்றுக்குள்ளே அமிழ்ந்துவிட்டது. வண்டியோடும், நாய்களோடும் மூவரும் ஆற்றில் அமிழ்ந்து மறைந்தார்கள். பனிப்பாதையிலே அந்த இடத்தில் ஒருபெரிய உடைப்புத்தான் தோற்றமளித்தது. ஜான்தார்ன்டன் பக்கைப் பார்த்தான்; பக் அவனைப் பார்த்தது. 'ஐயோ, பாவம்' என்றான் தார்ன்டன். பக் அவன் கையை அன்போடு நக்கிற்று.