பக்கம்:கானகத்தின் குரல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 : கனகத்தின் குரல் இவ்வாறு பக் மிகக் கூர்ந்து அவனைக் கவனிப்பதால், தார்ன்டன் தானாகவே பல சமயங்களில் தன் தலையைத் திருப்பி அதை நோக்குவான். அவ்வளவு நெருங்கிய தொடர்பு பக்குக்கும் அவனுக்கும் ஏற்பட்டிருந்தது. அவன் நோக்கும்போது பக்கின் அன்புள்ளம் அதன் கண்களில் வெளிப்பட்டு பிரகாசித்தது போலவே, அவனுடைய உள்ளமும் அவனுடைய கண்களில் வெளியாயிற்று. தார்ன்டன் தன்னைக் காப்பாற்றியதிலிருந்து பல நாட்கள் வரையில் அவன் தனது பார்வையை விட்டு விலகியிருப்பதைப் பக் விரும்பவில்லை. கூடாரத்தைவிட்டு அவன் வெளியில் புறப்பட்டுப்போவது முதல் திரும்பி வரும் வரையில் பக் அவனைப் பின்தொடர்ந்தே செல்லும். வடக்குப்பிரதேசத்திற்கு வந்ததிலிருந்து பல எஜமானர்கள் அதைவிட்டுப் பிரிந்ததால், எந்த எஜமானனும் நிரந்தரமாக இருக்கமாட்டான் என்ற பயம் அதற்கு ஏற்பட்டது. பெரோல்ட்டும் பிரான்சுவாவும், ஸ்காச்சு இனத்தவனும் தன் வாழ்க்கையிலிருந்து பிரிந்ததுபோலத் தார்ன்டனும் பிரிந்துவிடுவானோ என்று அது அஞ்சிற்று. இரவுநேரங்களிலும், கனவிலும் இந்த அச்சம் அதைப் பிடித்தது. அந்த வேளைகளில் அது உறக்கம் கலைந்து எழுந்து மெதுவாகக் கூடாரத்திற்கு அருகில் சென்று தார்ன்டன் மூச்சுவிடும் சப்தத்தை உற்றுக்கேட்கும். வாழ்க்கையைப் பண்படுத்தும் இந்தப் பெரிய அன்பு ஏற்பட்டிருந்தபோதிலும் வடக்குப்பிரதேச அனுபவங்கள் அதன் உள்ளத்திலே எழும்பிய பூர்வீகவாழ்க்கையின் உணர்ச்சியும் மேலோங்கி நின்றது. கூரையின் கீழ் தீயருகிலே வாழ்ந்த வாழ்க்கையால் அதற்கு விசுவாசம்ஏற்பட்டிருந்தது. அதே சமயத்தில் காட்டு வாழ்க்கையின் கொடுமையும், தந்திரமும் குடி கொண்டிருந்தன. நாகரிகமடைந்த பல தலைமுறைகளின் பண்பாட்டைக் கொண்டுள்ள தெற்குப்பிரதேச நாயாக அதைக் கருதுவதைக் காட்டிலும் ஜான்தார்ன்டன் வளர்த்த நெருப்பின் அருகே அமர்ந்திருக்க வந்துள்ள காட்டுவிலங்காகவே அதைக் கருத வேண்டும். தார்ன்டனிடம்தான் கொண்டுள்ள பேரன்பின் காரணமாக அவனிடத்திலிருந்து எதையும் அது திருடாது. ஆனால் வேறொரு முகாமில், பிறரிடமிருந்து எதையும் திருடுவதற்கு அது ஒரு கணமும் தயங்காது. மிகத் தந்திரமாகத் திருடுவதால் யாரும் அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பல நாய்களின் பற்கள் பட்டு அதன் முகத்திலும் உடம்பிலும் தழும்புகள் இருந்தன. பக் முன்போலவே மூர்க்கமாகவும் முன்னைவிட சாமர்த்தியமாகவும் சண்டையிடலாயிற்று. ஸ்கீட்டும்,