பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

துனங்கு மகாமேரு தனை யெடுத்தான் அவன்

துடியான வாழ்வெங்கே போய்விட்டான் துரையே கற்புடைய சீதா தேவியினால் இலங்கைக்

காவ லழிந்ததைக் கேட்கலையோ துரையே அப்படியே மறவரும் பகைத்தால் நம்மிட

ஆதீன”ந் தப்பாம லெடுபடுஞ்" சொன்னேன் மறவ னென்றால் பெரிய வீட்டுக்காரன் அதிலே மறவ னென்றாலுடன் பிறந்த பிறவிதா னெனக்கு மறவர் மேற்படை யெடுப்பை யானால் நானும் மங்கிலியங்க ளைந்துந்தன் மடியின்மேற் போட்டு மைந்தனையுங் கையோடே கூட்டி நாளை

மலையாளம் போய்விடியச் சேருவே னென்று மாசாவுங் கோபமாய்ச் சொல்ல நல்ல

மதுராபுரி கானுதுரை யரண்மனை போய்ச் சேர்ந்தான் நடந்ததோர் சேதிக ளனைத்தும் 担0臀夺町

நலமாக வெழுதியே தாண்டவனுக் கனுப்ப வஞ்சியர் வேள் தாண்டவ ராயன் அப்போ

மாசாவின் காயிதத்தை வாசித்துப் பார்த்து அன்னேரம் வரிசை யுடுப்புகளை நல்ல

தளவாய் மாஷாவுக்குப் பரிசுகள் தயாரித்தல்

அன்புடன் மாசாவுக்கனுப்ப வேணுமென்று

முன்னுறு வுலப்பை மணிசெய்து நல்ல

முடிமன்னன் கைகொலுசு பொன்னாலே செய்து வெள்ளியா லுரிக்கயிறு செய்து நல்ல

விலைமதியா வுரிக்கலையம் பொன்னாலே செய்து அள்ளியதில் சீனிசர்க்கரை போட்டு நலமாய்

அடுக்கி யிருபது வுரியம் அழகாகச் சேர்த்து மங்கை யவளிருந்து விளையாட . நல்ல

தங்கத்தால் பல்லாங் குழியொன்று செய்த தங்கத்தால் பலகணை செய்து நல்ல

தங்கத்தால் ஈர்க்கொல்லி பொன்னாலே சீப்பும் மாசாவுக்குச் சீனத்து ரவிக்கை நல்ல

வச்சிரமணி மூக்குத்தி பொன்னிறாற் செய்து மாசாவின் மகனுக்கென்று சொல்லி நல்ல

வயிடுரியக் குல்லாவில் வச்ரரேகக் கல்லழுத்தி

43. ஆதீனம் ஆட்சி 44. எடுபடும் கலைந்துபோகும், ஒழிந்துபோகும்.