பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

ஆண்டவனே மம்முதலி சாய்பே உனது அடிமை நானொரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு எத்தனை யோக மிருந்தாலும் இவர்கள்

பட்டோலை யெழுதுகிற வெள்ளாள ஜாதி ஆண்டவர் நீர்கீ ழிருக்கையிலே அவர்கள்

ஆனைமேல் வருகிறது சம்மதியோ வுமக்கு யானை விட்டுக் கீழே யிறங்கி அவரைக்

கால் நடையாய் கூட்டிவரச் சொல்லுங்க ளென்று

ராமுவை தளவாய்களிடம் அனுப்புதல்

அர்க்கார ராமனை யழைத்து துரை

ஆலோசித்து மம்முதலி யேது சொல்வானாம் பிள்ளைமா ரிருவரையும் ராமா இப்போ

கால்நடையாய் வரச்சொல்லி கூட்டிவா வென்றான் ஒரு பட்டாளந் தன்னைக் கூட்டி ராமன்

உயரானை தும்பிக்கையை மால்பிடித்து அரே பிள்ளை முல்லை மணிமார்பா நமது

அரசன் நவாபுதுரை சொல்லுகிறா ரப்பா ஆண்டவன் கீழிருக்கை யிலே நீயும்

ஆனைமேல் வருகிறது சம்மதியோ உனக்கு ஆனை விட்டுக் கீழே யிறங்கென்று அப்போ

ஆயிரந் துப்பாக்கி குந்தாவி னாலே ஒரு பளித்தா யானையின் மேல் மோத பாதர்

உத்தமன் தாமோதரன் ஏறிட்டுப் பார்த்து ஏறினான் பஞ்ச கல்யாணி அப்போ

இடது கையில் வாங்கினான் ரண்டுமுகப் பட்டா வலது கையி லைந்து மணிக்குதடா : பாதர்

வாங்கியே கடிவாளந் துடைதனி லனைத்து ஆனை தனை மூன்றுதரஞ் சுற்றி பாதர்

அதட்டி நவாபுதுரை பாளையத்தைப் பார்த்து யானை விட்டு விலகு விலகென்று நல்ல

அழகான யானைதனை யடிக்கிறாப் போலே குதிரைதனை யடிக்கிறாப் போலே வைத்து

கொளுத்தினான் நவாபு சனத்தின்மேற் பூசை' ஒருத்த ரோடொருத்தர் தட்டுக்கெட்டு அவர்கள்

ஒருமிக்கப் பின்வாங்கி நெளிக்கும் வேளையிலே அவுதா மேலிருந்த தளமந்திரி நல்ல

அதிவீரன் முல்லை மணித்தாண்டவ ராயன்

69. தளவாய் தாமோதரன் குதிரை மேலேறி யானையை அடிப்பது போல நவாபு

படையை அடித்தான்.