பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


அதை விட்டுக் கொடுத்தென்ன வென்று நல்ல
வன்பரகக் காராளன் சொன்ன மாத்திரத்தில்
அது போனால் போகட்டும் பிள்ளை உனது
ஆரூரு நாட்டை விட்டுத் தருவையோ வென்றான்
ஆரூர் நாட்டின் வளப்பம் பாதர்
ஆண்டவனே நவாடே நான் சொல்லுகிறேன் கேளும்
காட்டிலே லக்கிரி பிடுங்கி கள்ளர்
ஒட்டிலே யவித்ததனைத் தின்பார்கள் சாய்பு
இந்தச் சேதி கேட்டாரே யானால் நம்மை
இருவரையும் வழிமறித்துக் குத்துவார்கள் கள்ளர்
அதுதான் போகட்டுந் தம்பி உனது
ராமநாதபுரக் கோட்டை தருவையோ என்றான்"
ராமநாதபுரக் கோட்டை வளப்பம் நமது
ராஜ பரமேஸ்வரா சொல்லுகிறேன் கேளும்
ஒருபுறம் மண்ணாலே சுவரு அதிலே
யொருபுறம் வனாந்திரக் காடதிலே யுண்டு
பதினைந்து ஊழிக்காரர் வீடு எங்கள்
சேதுபதி குழந்தை வந்திருக்கிறது அங்கே
ராச னிருக்கிற கிராமம் அதனை
நான் விட்டுத் தருவே னென்று சொல்வேனோ துரையே
இப்படிப் பிள்ளைமகன் சொல்ல நல்ல

இயல்பாக நவாபுதுரை யேது சொல்லலுற்றார்

நவாபு கூறல்

தகப்பனுட வளவிற்குப் பிள்ளை வந்தால்
சாப்பிட வேணுமென்று சொன்னார் நவாபு
சாப்பிட மாட்டே னென்று நானும் - சாய்பே
தாண்டவ ராயனுஞ் சொல்வேனோ துரையே
முப்பது நாளைக்கு நோன் பெனக்கு நல்ல
முடிமன்னா தாண்டவராயாவென்று சொல்லி
கல்லிழைத்த பச்சைக் கலாத்து - அப்போ
கனமான பிள்ளைமார் கைதனிலே கொடுத்து
நாலு வகை வெகுமதியுஞ் செய்து அப்போ
நவாபுதுரை யோசித்துச் சொல்ல லுற்றா ரப்போ
பிரட்டனொடு பனிரண்டு பட்டாளம் உனக்கும்

பின்கட்டு பாறாவு மனுப்புகிறே னிப்போ

72. தெற்கு வந்து கானனை அடக்குவதற்கு சிவகங்கையிலுள்ள ஏதாவது ஒரு கோட்டையை விட்டுக் கொடுக்க நவாபு கேட்கிறான். தளவாய் மறைமுகமாக மறுக்கிறான்.