பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

சோல்ஜர் தலைக ளொரு கோடி அங்கே

துள்ளி விழுகிறதைச் சொல்லி முடியாது தீன் தீனென்று" சொல்லி பாலர்

திரும்பியே நாலு மூலை வீசினான் பட்டாவை பாணி பாணி"யென்று சொல்லி அப்போ

பதைத்து விழுகிறதே சிப்பாய்மார் தலைகள் தண்ணீர் தண்ணி ரென்று சொல்லித் அங்கே

தவித்து முறையோரைச் சொல்ல முடியாது ஒடுதே முழங்கால் ரத்தம் அதிலே

உருளுதே சிப்பாய் தலைகள் பனங்காய் போலே மலை மேலே துருப்பு குதிரை - அப்போ

மாளுதே பொல்லாத மைதான வெளியில்

சிப்பாய்கள் போனவழி தெரியவே இல்லை

குதிக்குதே சோல்ஜர் தலைகள் அங்கே

கூவுதே நாய் நரிகள் பிணங்களைத் தின்ன சோல்ஜர்கள் போன வழி கானோமில்லை பின்பு

கத்தி கட்டி போன வழி காணோம் கர்னல் போன வழி தெரியவேயில்லை அப்போ

அவல்தார் போன வழி காணோம் அஜிட்டன்' போன வழி தெரியவேயில்லை

சுபேதார் போன வழி காணுேம்

சோல்ஜர்கள் பட்டாளம் போன வழி காணோம் பாதர்

அப்படி கான் சாயபு நீலன் அறுத்த தலைக ளென்றால் சொல்ல முடியாது கானு

கத்தி யெல்லாம் ரத்தமாய்ப் போச்சு கனத்த தலை குட்டை யெல்லாம் ரத்தமாய் போச்சு

ரத்த கவுல் சுற்றியே வீச அப்போ

நராதிபன் கான்சாயபு மூர்ச்சையாய் நின்றான் தளகர்த்தன் தானப்ப நாய்க்கன் பாதர்

தயிரியமாய்ப் பதினைந்து குதிரையுடன் நின்றான் கான் சாயடைக் கண்ணாலே கண்டு அப்போ

கட்டழகன் தானப்பன் சலாம் வாங்கிக்கொண்டு ஆண்டவனே கான்சாய்பு துரையே உனது

அடுமை நானொரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு 75. தீன், தீன், தான்சாகிபுவின் போர்க் கோஷம், முஸ்லீம்கள் இல்வாறு

கூவிகிகொண்டே போர் செய்வார்கள். 76. பாணி - தண்ணீர், 77. அஜிட்டன் (Adjutant) அட்ஜூ டன்ட் என்ற ராணுவப்பதவி பிரிட்டிஷ் சேனையில் ராணுவ அலுவலகர்கள். அவுல்தார் சுபேதார். சோல்ஜர் - இங்கிலீஷ் uణLజీr.