பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தும்பூரு கோட்டைககுச் சென்று நமது

சேது.கான் பாபுக்கு பத்திரஞ் சொல்லி

மதுரை போய்ச் சேரவேணு மையா - என்று

மடப்புரத்துக் கால்வாயில் கத்தியைக் கழுவி

கத்தியை யுரைதனிலே போட்டு அப்போ

கான்சாய்பு தும்பூரு கோட்டைக்கு வந்து

கான்சாகிபு பின் வாங்குதல்

சேது.கான் தன்னை வரவழைத்து கானன்

சேதி யவனுக் கேது சொல்வானாம் பன் னிரண்டு சிப்பாயும் நல்ல பண்பான வெள்ளைக்காரத் துரைகள் ரிஜிமிட்டும் மூவாயிரம் துருப்பு குதிரை - தம்பி

முப்பது வெள்ளைக்கார பிரட்டன் துரையோடே கர்னல் பீரங்கி பனிரண்டு - அதிலே

கட்டான் துரைப்பட்டாளம் மூவாயிரம் சனங்கள் ரேக்லா முப்பது கூட - இப்போ நெருநெருத்துப் போகுதடா திருப்புவனக் கோட்டை நாளை பனிரெண்டு மணி வேளைக் கெல்லாம்

நமது தும்பூரு கோட்டை மேலே வருவாரு முண்டோ தும்பூரு கோட்டை தளமென்று கானு

துரை மகனும் திசை மதுரைக் கோட்டை போய்ச் சேர்ந்தான்

பிரிட்டன் யோசனை

அப்போது துரை பெரிய பிரட்டன் சனங்கள்

அனைவோரும் வந்தங்கே யொன்றாகச் சேர்ந்தார்

கண்டிட்டான் துரை பெரிய பிரட்டன் அப்போ

கண் சிவந்து பட்டாளத்தை எண்ணிக்கை பார்த்தான்

மூன்று பட்டாளம் வரைக்கும் இப்போ

முதல் சண்டை கானுகையால் விழுந்து போச்சுதென்று

மதுரைக்கு வழிகாட்டக் கேட்டல்

சனத்தை யெல்லா மெண்ணிக் கொண்டு - அப்போ

தளகர்த்த ரிருவரையு மழைத்துவரச் சொல்லி அரே பிள்ளை முல்லை மணிமார்பா இப்போது

அழைத்து வந்து பட்டாளத்தைக் காவு கொடுத்தாயே

ரிஜிமிட் ரெஜிமென்டு Regimentஆங்கிலப் படைப்பகுதி. அணி