பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

பிசகாலே வினையை வைத்துப் போனான் துரையே

பின்னாலே சேனைகட்கு மோசம்வரும் சாமி தும்பூரு கோட்டையை வாங்கி நல்ல துரை மகனே திசை மதுரை சேரவேணு மென்றான் நல்லதென்று துரை பெரிய பிரட்டன் தளத்தை

நடத்தியே தும்பூரு கோட்டை வந்துசேர்ந்து நாலு புறம் பாளையத்தை யிறக்கி அந்த

நாழியில் மோர்சாவில் பீரங்கி யேற்றி - திடீரென்று ஒரு பளுத்தா தீர்த்தான் அப்போ

சேருகான பகல் முழுதும் எதிர்த்துப்போராடி சாயங் காலம் யோசனைகள் செய்து தனது

சமேதா ரவுல்தாரை யழைத்தே சொல்வான் ராத்திரி இருக்கக் கூடாது இருந்தால் தப்பாமல் தலை யறுப்பான் பிரட்டனென்று சொல்லி ராத்திரியே பாளையத்தைக் கூட்டி வெகுசாய்

நடத்திட்டான் திசை மதுரை விடியு முன்னாலே கோட்டை யிலே யொருத்தரு மில்லை அப்போ

கூடாமல் தும்பூருக் கோட்டைக் குள்ளே பாளையத்தை நடத்தி வைத்து அப்போ

பாங்கான மதுரைக்குப் பயணமென்று சொல்லி நடத்தியே பட்டாளந் தன்னை அந்த

நாழிகையில் தெப்பக்குளம் வெளிக்குத் தெற்காக அடித்தானே கூடாரம் பிரட்டன் அந்த

நாழிகையில் பிள்ளைமார் பாளையத்தை யிறக்கி ஐந்து நாழிகைக்குள் பிரட்டன் - பாதர்

அன்பாக வந்ததைக் கண்டானே கானு இத்தனை பாளையங் களையும் பாதர்

எட்டு நாளைக்குள்ளே யடிப்பேன் நான்காணு

கான்சாகிபு சபதம்

பதினைந்து நாழிகைக் குள்ளாக தளத்தை

பஞ்சு பஞ்சா யடிப்பே னான் தானப்ப நாயக்கா பிரட்ட னொரு தலையிருக்கு மானால் அவன் பிடிப்பாண்டா யெப்படியுந் திசைமதுரை கோட்டை பிரட்டனுட தலைவிழுந்து போனால் அப்போ

பருந்தெடுத்த குஞ்சல்லோ மம்முதலி சாய்பு ஆர்க்காடு சென்னப்பட்டணம் வரைக்கும் அப்போ அடித்திடுவேன் ஆற்காட்டை பிடித்திடுவே னானும் சுபேதார வுல்தாரு மாரே நீங்கள்

சொன்னபடி கேழ்க்கிறேன் சிப்பாய் மாரே