பக்கம்:காப்டன் குமார்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. விடுதலை SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAeS ந_ - தம் மரத்திலிருந்த மன்னாடிக்குக் கைகால்கள் மரத்துப் போனதுதான் கண்ட பலன். அவன் எதிர் பார்த்த சம்பவங்கள் எதுவுமே நிகழவில்லை. குமார் குடிசைக்குள நுழைந்ததையும், வெளியே வந்து தன்னைக் கூப்பிட்டதையும். மீண்டும் உள்ளே சென்றவன் திரும்பாததையும் கண்கொத்திப் பாம்பு போல் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். ஆகவே அதற்கு மேலும் போலீஸ் காத்திருந்து, எங் கிருந்தும் வந்துவிடப் போவதாக மன்னாடி எண்ணவில்லை. தன் ஊகம் தவறு என்கிற முடிவுக்கு வந்து விட்ட மன்னாடி; மரத்தினின்றும் இறங்கினான். குமார் குடிசையினுள் படுத்துக் கிடந்தான். சட்டென்று அவனது இடுப்பைச் சென்று மெது வாகத் துழாவினான். தூண்டில்காரனுக்குத் தக்கை” யில் தானே கண்? சாமான்கள் எல்லாம் பத்திரமாகப் பொட்டலத்துடன் இ ரு ந் த ன. மன்னாடிக்குப் போன உயிர் அப்போதுதான் திரும்பி வந்தது.