பக்கம்:காப்டன் குமார்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 நன்றியும், இரக்கமும் கலந்த குரலில், *குமாரு..குமாரு...!’’ என்று இரண்டு மூன்று முறை அழைத்தான். ஹா...ஹாம்... அவன் கண்ணைத் திறக்கவே இல்லை. பாவம்! பசி மயக்கம். காலையில் வெறும் நீராகாரத்துடன் வெளியில் போனவன். மடியில் எத்தனை ஆயிரம் இருந்தென்ன? மாற்றானின் பணம் - தனக்குச் சொந்தமில்லாத அதிலிருந்து எடுத்து ஒரு டீ கூடக் குடித்திருப்பானா? இந்த வயசில் தன் சமூகத்தில் ஒரு பையன் இப்படி நடந்து கொண்டிருக்கிறானா? சே, கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தாம். - மன்னாடி மனத்திற்குள்ளேயே வருந்தினான் : ‘கடவுள் என்னுடைய வியாபாரத்துக் நல்ல கூட்டாளியைத் தான் ரப்பர் படகில் ஏற்றி அனுப்பி வைத்தார். நான்தான் வைத்து அநுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மளமளவென்று அ டு ப் ைப மூட்டினான். சோற்றை வடித்துக் கீழே இறக்கி விட்டு குமாரைத் தட்டி எழுப்பி உட்கார வைத்தான். 'உன்னை எங்கேயெல்லாம் ேத டு வ து? எத்தனை தரம் கத்துவது - எங்கே போயிருந்தாய்? இனி நீ எப்போது சமைத்து நான் சாப்பிடுவது? நான் செத்துத்தான் போகப் போகிறேன் போ1??வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த குமார், பசி வெறி யில் பொரிந்து தள்ளினான்.