பக்கம்:காப்டன் குமார்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மன்னாடி சிரித்த வண்ணம் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். 'நானா உன்னைப் பட்டினி போட்டுக் கொல்லறவன்? நல்லாப் பாரு?" என்று மூலையைச் சுட்டிக் காட்டினான். மன்னாடி இரண்டு தட்டை வைத்து அதில் சோற்றைப் போட்டான். உரித்த வெங்காயத்தைக் குமாருக்கும் - காய்ந்த கருவாட்டைத் தானும் வைத்துக்கொண்டு மோர்க் கலயத்துடன் உட்கார்ந்து கொண்டான். குமாருக்கு ஒரே கோபமாக வந்தது. நீ முதலில் சாப்பிட்டு முடி, நான் வருகிறேல்' என்று குடிசைக்கு வெளியில் வந்தான். சரி... சரி... கோபிக்காதே தம்பி! மறந்து போனேன்?? என்று மன்னாடி தட்டிலிருந்த கருவாட்டை எடுத்து வெளியில் எறிந்து விட்டு வந்து குமாரை அழைத்தான். o குமார், மன்னாடிக்கு நாலு வெங்காயத்தையும் இரண்டு பச்சை மிளகாயையும் எடுத்துப் போட்டான். சாப்பாடு முடிகிறவரை மன்னாடி வியாபாரத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. அதன் பிறகுதான் குமாரின் கோபமும் மறைந்தது. மன்னாடி மெது வாகப் பேச்சைத் துவக்கினான். 'ஆமா... ஏன் இன்னைக்கு இத்தனை நேரம்???