பக்கம்:காப்டன் குமார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 லாட்டா நீ இந்தப் போட்டோவை வெச்சுக்கிட்டு உன் மாமாவை அடையாளம் கண்டுபிடிக்கவே. முடியாது. இப்போ அவ்வளவு துாரம் உன் மாமா மாறிட்டாரு’’ என்று துணிந்து ஒரு பொய்யைக்கூறி னான். - i. . குமார் துள்ளிக் குதித்தான். மன்னாடி... என்ன நீ உளறுகிறாய்? என் மாமாவை உனக்குத் தெரியுமா? உன் கள்ளத் தோணிக்கு அவர் முதலாளியா?’’ ஆமா அ வ ர் த ன் எங்களுக்கெல்லாம் எஜமானரு. நம்மகிட்டே புழங்குறதெல்லாம் அவ. ருடைய பணந்தான். இங்கிருந்து நாம் அனுப்பும் சரக்குகள் எல்லாம் அவருக்குத்தான் போகுது. ரொம்பவும் தங்கமான மனிசரு. உன்னைக்கண்டா உயிரையே விட்டுடுவாரு..?? - மன்னாடி கூறிக் கொண்டிருக்கும் போதே குமாரின் தலை சுழன்றது. அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டான். - ‘மாமாவும் இதே தொழில் செய்து வயிறு வளர்க் கிறவர்தானா? அதனால்தான் அவர் அப்பாவைப் பார்க்கச்கூட வெட்கப் பட்டுக் கொண்டு ஊருக்கே வராமல் இருந்துவிட்டாரோ??- சே! இந்தத் திருட்டு மாமனின் வீட்டிற்கு நான் போகப் போவதே இல்லை’ என்று ஒரு கணம் எண்ணினான். ஆனால் மறுகணமே... இப்பொழுது அங்கேயும் போகாவிட்டால் நமக்குச் சென்னையில் வேறு யார் இருக்கிறார்கள்? இப்படி, ஒர் இடத்தில்