பக்கம்:காப்டன் குமார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 இல்லாமற்; போனால் சாந்தியைத் தேடிக் கண்டு பிடிப்பதும் எப்படி?’ என்று சமாதான மடைந்துவிட் 1 „FT 6UT-, அன்றிரவு பத்து மணிக்குச் சரக்குகளுடன் மன்னாடியின் கள்ளத்தோணி புறப்பட்டது. அதில் மன்னாடியின் பக்கத்தில் குமாரும் உட்கார்ந்து கொண்டிருந்தான். தன்னுடைய நிஜார்ப் பையை ஒரு முற்ை தடவிப் பார்த்துக் கொண்டான் குமார். அதில் போட்டோவும், தன்னுடைய மாமாவுக்கு என்று மன்னாடி எழுதிய ஒரு கடிதமும் பத்திரமாக இருந்தன. சரியாகப் பன்னிரண்டு மணி இருக்கும். எதிரே ஒரு ஸ்டீம் லாஞ்ச் வேகமாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. குமாருக்கு திக் திக் கென்றி ருந்தது, மறுகணம் லாஞ்சிலிருந்து ஒரு சீழ்கை: மிதத்து வந்தது காற்றைக் கிழித்துக் கொண்டு. மன்னாடி பதில் விசில் கொடுத்தான். அடுத்தகணம் கா-7