பக்கம்:காப்டன் குமார்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 படகுகள் இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி உறவாடின. இயந்திர வேகத்தில் லாஞ்சிலிருந்து சில. பொருள்கள் படகுக்குள் இறங்கின. + பையன் யாரு அண்ணே??’ என்று கேட்டான் லாஞ்சில் இருந்த ஒருவன். நெம்ம பட்டணத்து முதலாளிக்குச் சொந்தம். இப்போ அவங்க வீட்டுக்குத்தான் தம்பி வருது. கொண்டுபோய் பத்திரமாகச் சேர்த்துவிடுங்க?? என்று குமாரை அறிமுகப்படுத்தி லாஞ்சில் ஏற்றி அனுப்பினான். குமார் மன்னாடிக்கு ஒரு நீண்ட வணக்கம் செலுத்தினான். படகும் லாஞ்சும் வெவ்வேறு திசை களில் பிரிந்து மறைந்தன. வழியெல்லாம் மன்னாடிக்கு மனம் சரியாகவே இல்லை. இப்படி ஒரு நாள் திரும்புகிற போதுதானே அவன் குமாரைக் கண்டான். அவன்தான் எவ்வளவு நல்ல பையன் - நாணயமான பையன்! கொஞ்ச நாட்களுக்குள் எவ்வளவு நன்றாகத் தயாராகிவிட் டான்! இப்போதுகூட, போலீஸ்காரன் கண்ணில் விழுந்துவிட்டான்; மீண்டும் அவன் மீது போலீஸ்