பக்கம்:காப்டன் குமார்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 | 6. நான் முதலாளியைப் பார்க்கவேண்டும்?? என்றான் குமார். 'ஏன், என்னைப் பார்த்தால் முதலாளியாகத் தெரியவில்லையா? நான்தான் முதலாளி. என்ன வேண்டும்? விஷயத்தைச் சொல்லு?’ என்றார் அவர்; தமது ஜரிகை அங்கவஸ்திரத்தைச் சரி செய்து கொண்டே. பெரியவரின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளியானதுதான் தாமதம்; உடனே குமார், 'மாமா, என்னைத் தெரியவில்லையா??? என்று தாவி சென்று அவரைக் கட்டிக்கொண்டு விட்டான். சீ.சீ.சீ... விடு கையை, மாமாவாவது மருமகனாவது... என்ன உளறுகிறாய்?’ என்று அதட்டினார் முதலாளி. என்ன மாமா, இப்படிக் கோபிக்கிறீர்கள்! உங்களைப் பார்க்க வேண்டுமென்று, பர்மாவிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்?’ என்று துக்கம் பீரிடக் கூறியவண்ணம் மன்னாடியின் கடிதத்தை அவரிடம் நீட்டினாண் குமார். உள்ளே சென்று அதைப் படித்த முதலாளி வெளியே துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தார். கண்ணே, குமார்!’ என்று தாவி அணைத்து அவனை உள்ளே அழைத்துச் சென்றார். - அப்பா எங்கே? சாந்தி செளக்கியமா? உன்னை நான் நாலைந்து வயதில் பார்த்தது