பக்கம்:காப்டன் குமார்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 அல்லவா? ஆள் பெரியவனாகி விட்டாயே?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக் குமாரைக் குஷிப்படுத்தினார். குமாரும் ஆதியோடு அந்தமாக, எல்லாவற்றை யும் சொல்லி முடித்தான். சாந்தியை எப்படியும் கண்டுபிடித்து விடலாம் - கவலைப் படாதே?? என்று மாமா தேறுதல் கூறினார். சற்று நேரத்துக்கெல்லாம் குமார் குளிப்பதற்கு ஏற்பாடாயிற்று. சுவையான சாப்பாடு நடந்தது. மாமாவின் வீட்டில் குமாருக்கு ராஜ உபசாரம் நடத்தது. சாந்தியைத் தேடவும் அவர் முயற்சி செய்வதாகக் கூறியிருந்ததால் குமாருக்கு அந்தக் கவலையும் ஒரளவு குறைந்தது. o ஆனால் படிக்காமல் இப்படிச் சும்மா சாப்பிட்டு விட்டுத் துரங்கிக் கொண்டிருந்தால் போதுமா? குமாருக்குப் பள்ளிக்கூடம் - படிப்பு என்றால் உயிரா யிற்றே! குமாரின் பிடிவாதத்தின் பேரில் அருகிலுள்ள ஒரு பெரிய பள்ளிக்கூடத்தில் அவன் சேர்க்கப் பட்டான். ஆனால் அங்கே அவன் பட்ட பாடு! பெர்மாக்காரன்...பர்மாக்காரன்’ என்று வகுப்பி லுள்ள மாணவர்கள் எல்லாம் அவனைக் கேலி பேசி னார்கள். கலாட்டா செய்தார்கள். சான்...யூ... மிதாமி.கமி...சன்...யூகி...?? என்று ஏதேதோ சொல்லிக் கூவினார்கள். 'கி...யின்...சங்...மத்தி... மிய்யா?? என்று கவர்களில் எழுதி ஒட்டினார்கள்.