பக்கம்:காப்டன் குமார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காப்டன் குமார்

1. திரைகடலோடி திரவியம்
தேடியவர்கள்

திடீரென்று இந்தப் பர்மாவுக்கு இப்போது என்ன வந்து விட்டது? இன்பம் ததும்பிக் கலகல வென்றிருக்கும் வீதிகளெல்லாம் ஏன் துக்கம் கொண்டாடுகின்றன? புள்ளிமான்கள் போல் துள்ளித் திரிவார்களே பர்மியக் குழந்தைகள்; அவர்களது பிஞ்சு. முகங்களெல்லாம் கன்றிக் கிடக்கின்றனவே! அவர்களோடு உடன் பிறந்தவர்கள் போல் தெருவெல்லாம் கைகோத்து ஆடுவார்களே, இந்தியச் சிறுவர்கள்--ஒருவனைக்கூட காணவில்லையே! ஏன், ஏன், ஏன்?--

குமாருக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை. நண்பர்களுடன் கிராமத்திற்கு, ‘பிக்னிக்' போயிருந்தான் அவன். ஒரு வாரம் சுற்றி அலைந்துவிட்டு ஊருக்கு வந்தவன் திடுக்கிட்டுப் போனான். எங்கே