பக்கம்:காப்டன் குமார்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அதைப் பிரித்த இன்ஸ்பெக்டரது கண்கள் அகல விரிந்தன. புத்தம் புதிய வைரக்கற்கள் அதில் ஒளி வீசின. கையிலெடுத்த இன்ஸ்பெக்டரின் உதடுகள் முணுமுணுத்தன: "ஸ்மகிள்டு குட்ஸ்!?? ஆனால், குமார் சிறிதுகூட இதற்கெல்லாம் கவலைபட்டவனாகக் காணப்படவில்லை. மன்னாடி யிடம் தான் சிக்கிக் கொண்டதிலிருந்து அந்த நிமிஷம் வரை; நடந்த விஷயங்கள் அத்தனையையும் விளக்கி கூறினான். இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் விவர மாக, அவ்வப்போது தமது டைரியில் குறித்துக் கொண்டேவந்தார். - 'மன்னாடிக்கு நான் உதவி செய்தேன்? அவன் என்னைக் காப்பாற்றியவன் என்பதற்காக மட்டு மல்ல; என் தங்கையைக் கண்டுபிடிப்பதில் உதவு வதாகக் கூறியிருந்தான். ஆனால் அன்று ஒரு நாள் போலீஸ்காரன் கையில் அகப்பட்ட பிறகு என்னை வைத்து வியாபாரம் நடத்த அவனுக்குப் பயம் வந்து விட்டது. அ. த் து ட ன், யாரையோ என்னுடைய மாமா என்று ஒரு மிகப் பெரிய பொய்யையும் சொல்லி என்னை இங்கே ஒருவ ரிடம் அனுப்பி வைத்து விட்டான். அவர் ஒரு பயங்கரப் பதுக்கல் பேர்வழி. எனக்கு அவர் மாம னும் இல்லை - அவருக்கு நான் மருமகனும் இல்லை. மன்னாடி ஒரு கடிதத்தில், வருகிற இந்தப் பையன் நம்முடைய வியாபாரத்துக்கு மிகவும் உதவி