பக்கம்:காப்டன் குமார்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, மிஸ்டர். கருணாகரன், நீங்கள் இந்தப் பிள்ளையாண்டா னிடம் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ளுங்கள்;. ஆமாம்...நான் அவ்வளவுதான் சொல்லுவேன்;. நான் எப்போதாவது, கொள்ளைக் கூட்டம்-கள்ளக் கடத்தல் என்று ஆரம்பித்தால்கூட நடுங்குவீர்களே! அத்தனையிலும் ஊறி; இவன் தப்பித்தும் வந்திருக் கிறான். ஒரு போலீஸ் உத்தியோகத்திற்கு - இன்டெலிஜென்ட் டிபார்ட்மெண்ட்டுக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமையும் இந்தக் குமாருக்கு இருக்கிறது. இவன் இப்போது எனக்குக் கொடுத் திருக்கும் வேலை மட்டும் முருகன் அருளால் வெற்றி கரமாக முடிந்து விட்டால்...?? என்று இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டிருக்கும்போதே, 'அதன் பிறகு உங்களுக்கு டபிள் பிரமோஷன்” நிச்சயம் சார்; துணிச்சலுடன் புகுந்து விளையாடுங்கள் சார்! ஆனால் என் போலி மாமாவிடம் மட்டும் கொஞ்சம் கருணை காட்டுங்கள்...?? என்றான் கும்ார். கடகடவென்று சி ரி த் த இன்ஸ்பெக்டர், ஏதேது... பயல் பலே போடு போடுகிறானே... எனக்கே அல்லவா தைரியமூட்டி கன்கிராஜு லேஷன் சொல்கிறான்! ஆல்ரைட், ஓ.கே...நான் போய் வருகிறேன், மிஸ்டர் கருணாகரன்! குட்பை. காப்டன் குமார்! கவலைப்படாதே, உன் போலி மாமாவை உயிரோடு வைத்துத்தான் காரியங்கள் எல்லாம் நடக்கும்?’ என்று கூறி விடை பெற்றுக்