பக்கம்:காப்டன் குமார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

சமயமில்லையென்று மறுத்துவிட்டுவந்த விஷயத்தை பற்றி மட்டும் ஆவலோடு விசாரித்தான் குமார்.

சுவான் உடனே ஆச்சரியத்தோடு, “அப்போது உனக்கு இங்கே நடக்கும் விஷயம் ஒன்றுமே தெரியாதா, குமார்?” என்று கேட்டான்

"ஹு......ஹும்......நான்தான் ஒரு வாரமாக ஊரில் இல்லையே, பார்த்தாலே தெரியவில்லை?" என்று தனது தோளில் தொங்கும் 'காம்ப் பாக்' காமிரா, பிளாஸ்க் - எல்லாவற்றையும் சுட்டிக் காட்டினான் குமார்.

"ஓஹோ, பிக்னிக் போய்விட்டு இப்போதுதான் வருகிறாயா? பார்த்தாயா குமார், பார்த்தாயா; கடைசியில் என்னைக் கூப்பிடாமல்தானே போனாய்? இருக்கட்டும். சரி, எங்கேயெல்லாம் போனாய், என்னவெல்லாம் பார்த்தாய்? கூட யார் யாரெல்லாம் வந்தார்கள் குமார்? என்றான் சுவான் படபடப்பாக.

"சுவான், அதெல்லாம் பிறகு விவரமாகச் சொல்லுகிறேன். இப்போது முதலில் நீ என் கேள்விகளுக்குப் பதில் சொல்லு. பர்மா மீது அண்டை நாடுகள் ஏதாவது ஆக்கிரமிப்புச் செய்திருக்கின்றனவா? இல்லை படையெடுக்கப் போகின்றனவா? அல்லது மீண்டும் குண்டுகளைப் போட்டு அழித்துவிடப் போகிறேன் என்று ஜப்பான்காரன் நம்மைப் பயமுறுத்துகிறானா? அப்படியே இருந்தாலும் பாவம், இந்தியர்களைப் போட்டு ஏன் இந்தப் பர்மாக்காரர்கள் படாத